தேர்தல் பாண்டு: புது டேட்டா.. பாஜகவுக்கு 6986 கோடி.. திமுகவுக்கு அள்ளி கொடுத்த லாட்டரி மார்ட்டின்!

Mar 17, 2024,06:15 PM IST

டில்லி : தேர்தல் பாண்டுகள் மூலமாக அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான புதிய புள்ளி விபர அறிக்கையை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விபர அறிக்கை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட் இடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் உள்ள விவரங்களை தற்போது தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது.


தேர்தல் கமிஷன் கடந்த வாரம், அரசியல் கட்சிகள் தேர்தல் பாண்டு மூலமாக பெற்ற நிதிகளின் புள்ளி விபரத்தை பொதுப்படையாக வெளியிட்டது. ஆனால் இந்த புள்ளி விபரங்களின் டிஜிட்டல் காப்பியை பென் டிரைவில் ஏற்றி, சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யும் படி சுப்ரீம் கோர்ட் கேட்டது. இதனையடுத்து இன்று சீல் இட்ட கவரில் புதிய புள்ளி விபர தகவல் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


இதில் உள்ள தகவல்கள் 2019ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதிக்கு முன்பு பெறப்பட்ட பாண்டுகளின் விபரங்கள் என சொல்லப்படுகிறது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே தேர்தல் கமிஷன் இந்த புதிய புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷன் லேட்டஸ்டாக வெளியிட்டுள்ள ஆவணங்களின் படி, பாண்டுகள் அளிக்கப்பட்ட தேதிகள், பாண்டுகளின் எண்ணிக்கை, அந்த பாண்டுகளை வழங்கிய எஸ்பிஐ வங்கி கிளை, அதற்கு ரசீது வழங்கப்பட்ட தேதி, எந்த தேதியின் பணம் அரசியல் கட்சிகளின் கணக்குகளுக்கு வந்துள்ளது உள்ளிட்டவைகள் மட்டுமே உள்ளன. 




வழக்கம் போல, அந்த பாண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட எண் பற்றிய தகவல் அதில் சேர்க்கப்படவில்லை. அந்த பாண்டுகளின் எண்களை தரும் படி திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் எஸ்பிஐ வங்கியிடம் கேட்டிருந்தது. ஆனால் அது போல் எந்த கோரிக்கையையும் பாஜக, எஸ்பிஐ வங்கியிடம் கேட்கவில்லை. மறுபக்கம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தங்கள் கட்சி தேர்தல் பாண்டு மூலமாக எந்த நன்கொடையும் பெறவில்லை என கூறி இருந்தது. இடதுசாரிகள் கட்சிகளும் தங்கள் கட்சிகள் அப்படி எந்த நன்கொடையும் வாங்கவில்லை கூறி உள்ளன.


இப்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவர அறிக்கையிலும் கூட பாஜகவே அதிக அளவிலான பணத்தைப் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தேர்தல் பாண்டுகள் மூலம் ரூ.656.5 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடி லாட்டரி கிங் என சொல்லப்படும் சான்டியாகோ மார்டினின் furure gaming நிறுவனம் கொடுத்ததாகும். 


தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 2018 முதல் 2019 ம் ஆண்டு வரை ரூ.230.65 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், என்பசி குரூப், இன்போசிஸ், பயோகான் ஆகியவற்றிடம் இருந்து நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன.


யாரெல்லாம் எவ்வளவு வாங்கியுள்ளார்கள்.. ஒரு பார்வை:


பாஜக அதிபட்சமாக ரூ. 6,986 கோடி அளவுக்கு தேர்தல் பாண்டுகள் மூலம் நிதி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019-20 காலகட்டத்தில் பாஜகவுக்கு  ரூ. 2555 கோடி கிடைத்துள்ளது


திமுகவுக்கு ரூ. 656.5 கோடி கிடைத்துள்ளது.  அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டின் ரூ. 509 கோடி கொடுத்துள்ளார். இதே லாட்டரி மார்ட்டின்தான் தேசிய அளவில் அதிக அளவில் பணத்தைக் கொட்டிக் கொடுத்த நபர் ஆவார்.


காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பாண்டுகள் மூலம் ரூ. 1334.35 கோடி கிடைத்துள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ. 1322 கோடி, திரினமூல் காங்கிரஸு 1397 கோடி கிடைத்துள்ளது.  திரினமூல் காங்கிரஸ்தான், பாஜகவுக்கு அடுத்து அதிக அளவில் நன்கொடை வாங்கிய கட்சியாகும்.


பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு ரூ. 944.5 கோடி கிடைத்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ. 442.8 கோடி, தெலுங்கு தேசம் ரூ. 181.35 கோடி பெற்றுள்ளன.


சமாஜ்வாடி கட்சி ரூ. 14.05 கோடி, அகாலிதளம் ரூ. 7.26 கோடி, அதிமுக ரூ. 6.05 கோடி, தேசிய மாநாட்டுக் கட்சி ரூ. 50 லட்சம் என்று வாங்கியுள்ளதாக இந்தப் பட்டியல் தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்