பூன்ச்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாடுபட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் சிலையை நிறுவும் விழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூன்ச் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா திறப்பு விழாவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் சகோதரத்துவம் மறைந்து வருகிறது. அதை மீண்டும் உயிர்ப்பித்து வலுப்படுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இந்தக் கோவில் வர வேண்டும் என்று பாடுபட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன்.
ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்தமானவர் அவர். மதச்சார்பற்று அனைவருக்கும் அவர் கடவுள். அப்படித்தான் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை, ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தியவர் ராமர். மதம் இனப் பாகுபாடில்லாமல் அனைவரையும் கை தூக்கி விட வேண்டும் என்ற செய்தியை விட்டுச் சென்றவர் ராமர் என்று கூறினார் பரூக் அப்துல்லா.
ராமல் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர். நாடு முழுவதிலுமிருந்து 4000 துறவிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}