Bro... Look at your Keyboard.. இப்ப இதான் டிரெண்டாம்ல.. அநியாயம் பண்றாங்கய்யா!

Apr 24, 2024,06:14 PM IST

சென்னை: அவ்வப்போது டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் டிரண்ட் என்ற பெயரில் ஏதாவது அக்கப்போர் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது Bro... Look at your Keyboard between என்ற டிரெண்ட் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.


யாரைப் பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் இந்த லுக் அட் யுவர் கீ போர்ட்தான். செமையாக கலாய்த்துக் கொண்டுள்ளனர். ஜாலியான டிரெண்டாக இருந்த இது இப்போது அரசியல் சோசியல் மீடியாக்களின் புண்ணியத்தால் அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமா வழக்கம் விஜய் அஜீத் ரசிகர்களும் ரஜினி விஜய் ரசிகர்களும் கூட இதை வைத்து செமையாக ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.


சரி அது என்ன Bro... Look at your Keyboard என்று கேட்கறீங்களா.. அது வேற ஒன்னுமில்லை பாஸ்.. கீ போர்டில் இரண்டு லெட்டர்களுக்கு நடுவில் அர்த்தம் வருவது போல வார்த்தையை  சொல்லி விளையாடுவதுதான் இது. உதாரணத்திற்கு க்யூ மற்றும் ஆர் ஆகிய எழுத்துகளுக்கு இடையில் பாருங்கள்.. என்ன வருகிறது.. WE என்று வருகிறதா.. அதாவது நாம் என்ற அர்த்தத்தில் வரும் வார்த்தை. இது போல நமக்கு வசதியாக வார்த்தைகளை கிரியேட் செய்து கலாய்க்கும் டிரெண்ட்தான் இது..

 

2021ம் ஆண்டு வெளியான ஒரு மீமை வைத்துத்தான் இந்த விளையாட்டு தொடங்கியது. அந்த மீமில் ஒரு கே -ஆன் கார்ட்டூன் கேரக்டர் இடம் பெற்றிருந்தது. அதில் உங்க கீ போர்டில் டிக்கும் ஓவுக்கும் இடையே பாருங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. டி மற்றும் ஓ இடையே என்ன வரும்.. ஒய் யூ ஐ ஆகிய எழுத்துக்கள் இல்லையா.. அது ஆக்சுவலி, யூய் என்ற கார்ட்டூன் கேரக்டர் ஆகும். 


இந்த மீமை வைத்து அப்படியே ஆளாளுக்கு தங்களது இஷ்டப்படி டிரெண்ட் செய்து விளையாடி வருகின்றனர். இப்படி வெளியான முதல் விளையாட்டு Look at your Keyboard and see the letters between H and L... இந்த லெட்டர்களுக்கு இடையே என்ன வரும் ஜே கே வரும்.. ஜே கே என்றால் ஜஸ்ட் கிட்டிங் என்று பொருளாகும்.. இதை வைத்து அப்படியே பிக்கப் செய்ய ஆரம்பித்து விட்டனர் நம்மாட்கள். இப்பப் பார்த்தா குண்டக்க மண்டக்க இது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.


நீங்கள் டிவிட்டரிலேயே ஒரு ஓரமாக குடியிருப்பவர் என்றால் உங்களுக்கெல்லாம் விளக்கமே தேவையில்லை.. வாங்க நேரடியாக சில பல கலாய்ப்புகளைப் பார்த்து மகிழ்ந்து விட்டு வருவோம்.


ஆக்சிடன்ட் ஆச்சுன்னு சொன்னியே எங்கடா இருக்கே!




நீயும் நானும்தான் அன்பே!




ஐயோ ஐயோ!




சேவியர் அங்கிள் ... நீங்களுமா!




நல்லா இல்லடா




தூக்கிப் போட்டு உடைக்கப் போறேன்



சமீபத்திய செய்திகள்

news

வட கிழக்குப் பருவ மழை.. 1871ம் ஆண்டுக்குப் பிறகு.. 3வது முறையாக நீண்ட நாள் நீடித்த பருவ மழை!

news

மகா கும்பமேளா 2025 : எகிறும் விமான டிக்கெட் கட்டணம்... 600% லாபம் பார்த்த விமான நிறுவனங்கள்

news

TN BJP president Race: தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் இவரும் இருக்கிறாரா?

news

100 நாள் வேலை நிலுவைத் தொகை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

news

தைப்பூசத்தையொட்டி.. பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம்.. அமைச்சர் சேகர்பாபு

news

உத்தரகாண்ட் மாநிலத்தில்.. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது.. இன்று முதல்!

news

நெடுஞ்சாலைகள்,பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள்.. அமைக்க.. ஹைகோர்ட் தடை!

news

பெற்றோர்களே.. குட்டீஸ்கள் சாப்பிடும் போது கவனம்.. கேரட் தொண்டையில் சிக்கி சிறுமி மரணம்!

news

மறக்க முடியாத மழை நினைவுகளுடன்.. விடைபெற்ற வட கிழக்குப் பருவமழை.. அடுத்து வெயிலுக்கு காத்திருப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்