டிரெண்டே மாறிப் போச்சே.. என்ன செய்யும் அதிமுக.. தேமுதிக வராவிட்டால்.. அடுத்த மூவ் என்ன?

Mar 15, 2024,07:51 PM IST

சென்னை:  திமுக கூட்டணி "சங்கர் சிமென்ட்" போட்டு உறுதியாக கட்டப்பட்ட கோட்டை போல ஒரு பக்கம் ஸ்டிராங்காக இருந்தாலும் மறுபக்கம் அதிமுக கூட்டணி மிகவும் பலவீனமாக காட்சி தருகிறது. அதிமுக பக்கம் போகவிருந்த கட்சிகளை பாஜக தன் பக்கம் இழுத்ததே காரணம்.


தேசிய அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கடுமையாக டஃப் கொடுப்பது தமிழக அரசியல் களம் தான். உள்ளாட்சி தேர்தல் ஆனாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி தமிழகத்தில் இரண்டே கூட்டணி தான். ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி. தேசியக் கட்சிகளுக்கு இங்கு இடமில்லை. மக்களும் நிராகரித்து பல வருடங்களாகி விட்டது. 


தேர்தல் வந்து விட்டாலே எந்தெந்த கட்சி, இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியில் இணைய போகின்றன என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். தேசிய அரசியலிலும் இந்த கட்சிகள் ஆதரவு அளிக்கும் கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது.


பாமக - தேமுதிக - தமாகா




தமிழக அரசியலை பொருத்த வரை தேசிய கட்சிகளுக்கு எப்போதுமே செல்வாக்கு குறைவு தான். அதிமுக, திமுக இந்த கட்சிகளின் ஆதரவை நம்பி தான் காங்கிரசும், பாஜக.,வும் இதுவரை இருந்த வந்தன. இந்த முறையும் அதிமுக கூட்டணியில் தான் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. மறுபக்கம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய அளவில் யாரும் சேராமல் இருந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் தான் சொல்லிக் கொள்ளும்படியான கட்சியாக பாஜகவில் இருந்தது.


அதிமுக, பாஜக உடனான கூட்டணியை பல மாதங்களுக்கு முன்பே முறித்துக் கொண்டது. பாஜக.,வை கூட்டணியில் சேர்க்கவே மாட்டோம் என்று வேறு உறுதியாக சொல்லி விட்டது. இந்த இரண்டு கட்சிகளும் கை விட்டதால் தமிழ் மாநில காங்கிரசை மட்டும் கூட்டணியில் வைத்துக் கொண்டு தான் பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இது பிப்ரவரி மாத நிலவரம் தான்.


ஓடி வரும் சிறு குறு கட்சிகள்




மார்ச் துவங்கியது முதல், குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பெரும்பாலும் எல்லாமே குட்டிக் கட்சிகள், சிறு தலைவர்கள்தான். ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் என வரிசையாக வந்தனர். மூமுகவின் டாக்டர் சேதுராமனும் ஆதரவு கொடுத்தார்.


நீங்கெல்லாம் வெறும் கூட்டணிதானே வச்சிருக்கீங்க.. இப்ப பாருங்க என்று கூறி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரோ, தனது கட்சியையே கொண்டு போய் பாஜக.,வில் இணைத்து விட்டார். நேற்று பாமகவுக்கும், பாஜகவுக்கும் கூட்டணி இறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியானது. இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. 


இப்போதைக்கு தேமுதிக மட்டும்தான் மிச்சம் உள்ளது. அது அதிமுகவுக்குப் போகுமா அல்லது பாஜக பக்கம் நகர்ந்து வருமா என்று தெரியவில்லை. தேமுதிக வைக்கும் டிமாண்டுகள் எதார்த்தத்துக்கு மீறிய வகையில் இருப்பதால்தான் யாருடனும் அதற்கு கூட்டணி இறுதியாகாமல் உள்ளது.


தவிப்பில் அதிமுக




தமிழக அரசியலில் பாஜக தனித்து விடப்பட்டது என்ற நிலை மாறி, தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனித்து விடப்பட்டது என்ற நிலை உருவாகி விட்டது. அதிமுக, திமுக கூட்டணியை நம்பி தான் தேசிய கட்சிகள் உள்ளன என்ற தமிழக தேர்தல் டிரெண்டையே பாஜக மாற்றி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. 


இப்போது அதிமுக.,விற்கு இரண்டே சாய்ஸ் தான் உள்ளது. ஒன்று தனித்து போட்டி என அறிவித்து, வேட்பாளர்களை அறிவித்து கெளரவமாக தேர்தலை சந்திப்பு. மற்றொன்று, அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை.. .நிரந்தர எதிரியும் இல்லை என சொல்லி விட்டு, பாஜக.,விடம் வலிய சென்று கூட்டணியை புதுப்பித்துக் கொள்வது தான்.


ஆனால் பாஜக - அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பில்லை.. எனவே தேமுதிக வருகிறதா என்று பார்த்து விட்டு வராவிட்டால் தனது வேட்பாளர்களை அறிவிக்க அதிமுக முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்