மக்களே விரல் ரெடியா.. 10,214 ஸ்பெஷல் பஸ்கள் தயார்.. சந்தோஷமா ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டுட்டு வாங்க

Apr 16, 2024,06:08 PM IST

சென்னை: சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கு  சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 10,214 சிறப்புப் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்து வருகிறது.


ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  அதே நாளில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. அதன் பிறகு 18ம் தேதி ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன்4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.


இந்த நிலையில் சென்னையில் வசிக்கும், அதேசமயம், ஓட்டுகளை சொந்த ஊரில் வைத்துள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணப்பட ஆரம்பித்துள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் போக முயன்ற பலர் பஸ்கள் சரிவரக் கிடைக்காமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம். அந்த சிரமம் இந்த முறை வந்து விடக் கூடாது, ஓட்டு போடாமல் மிஸ் ஆகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பலர் இப்போதே சொந்த ஊர்களுக்குக் கிளம்பி வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு சவுகரியமான முறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல்:


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 2970 சிறப்பு பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7154 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3060 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 1825 சிறப்பு பேருந்துகளும் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2295 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 8034 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்