Loksabha Elections: முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.. மக்களும் தீவிர ஆர்வம்

Apr 19, 2024,07:01 AM IST

சென்னை: நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 39 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினோடு, சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார்.


தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில் 10.92 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கிறார்கள். வாக்களிப்பதற்கு வசதியாக 81,157 கட்டு்பபாட்டு இயந்திரங்களும், 86,858 விவிபாட் இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 76 பேர் பெண்கள் ஆவர். 


தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இன்றே நடைபெறுகிறது. 




சென்னையில் முதல் ஆளாக வாக்களிக்க வந்தார் நடிகர் அஜீத். அஜீத் குமார் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அவர் பாரதிதாசன் நகரில்உ ள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் வழக்கமாக வாக்களிப்பார். எப்போதும் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிப்பது வழக்கம். ஆனால் அவரைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டு விடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் அஜீத்.


முதல் ஆளாக வாக்களித்த விஐபிக்கள்




ஆறரை மணி அளவில் வந்த அஜீத், பொறுமையாக வாக்குச் சாவடிக்கள் அமர்ந்து காத்திருந்தார். அதன் பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று காலை முதல் ஆளாக வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில்  வாக்களித்தார். திண்டிவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தர்மபுரி பாமக வேட்பாளருமான சவுமியா அன்புமணி வாக்களித்தார்.




சென்னையில் வாக்களித்த தமிழிசை, ராதிகா, தமிழச்சி தங்கப்பாண்டியன்


சென்னை சாலிகிராமத்தில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், திருச்சி தில்லைநகரில் அமைச்சர் கே.என். நேரு, திருத்துறைப்பூண்டி வேளூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வாக்களித்தனர். 


பாஜகவைச் சேர்ந்த நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் சென்னை திருவான்மியூரில் வாக்களித்தார். நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு, தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் நீலாங்கரையில் வாக்களித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்