பாஜக, காங்.கை தெறிக்க விடும் தென் மாநிலங்கள்.. என்ன செய்ய போகின்றன தேசிய கட்சிகள்?

Mar 03, 2024,05:42 PM IST

டில்லி : லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வடக்கில் தேர்தல் வேலைகள், பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என அரசியல் களம் பரபரக்க துவங்கி உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தல் களம் ஆமை வேகத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு மட்டுமல்ல, ஆளும் கட்சியான பாஜக.,விற்கும் இதே நிலை தான்.


வடக்கில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பாஜக வலுவாக உள்ளது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலங்களிலும் தற்போது அரசியல் குழப்பம், உட்கட்சி குழப்பம், எம்எல்ஏ.,க்கள், அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் கட்சி மாறுவது என ட்விஸ்ட் மேல் ட்விஸ்டாக நடந்து வருகிறது. எந்த மாநிலத்தில் என்ன குழப்பம் நடக்குமோ என்று தான் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலைமை உள்ளது. 




வடக்கில் அனைத்து மாநிலங்களையும் கிட்டத்தட்ட தனது வசமாக்கி விட்டது பாஜக. வடக்கில் ஆதரவு அதிகம் உள்ளது என்ற நம்பிக்கையில் தான் 300 ப்ளஸ் இடங்களை நாங்கள் பிடிப்போம் என பாஜக அழுத்தமாக சொல்லி வருகிறது. ஆனால் தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், தெலங்கானா, ஆந்திரா போன்றவற்றில் பாஜக.,வின் திட்டங்கள் எதுவும் இதுவரை கை கொடுக்கவில்லை. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை மாநில கட்சிகளுக்கு தான் பலமும், செல்வாக்கும் அதிகம். 


தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரசிற்கு செல்வாக்கு குறைவு தான். கேரளா, ஆந்திராவை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாஜக-காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு வங்கி மிக மிக குறைவு.  இந்த மாநிலங்களில் என்ன செய்தாலும் இதுவரை கூட்டணியை கூட பாஜகவால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதிலும் பாஜக நிலைமை படுமோசம் என்றே சொல்லலாம். வடக்கில் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக.,வை தேடி சென்று கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தென் மாநிலங்களில் பாஜக.,தான் மாநில கட்சிகளின் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 




குறிப்பாக தமிழகத்தில் அதிமுக., கூட்டணியை பாஜக இன்னும் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதிமுக, கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டாதா என்று தான் காத்திருக்கிறது. ஆனால் அதிமுக, பாஜக வுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக உள்ளது. பாஜக, அதிமுக.,வுடன் கூட்டணிக்கு தூது அனுப்பி வருகிறது என்பது சமீபத்தில் தமிழகம் வந்த போது பிரதமர் மோடி பேசிய பேச்சிலேயே நன்றாக தெரிந்தது.


பாஜக., தான் இப்படி என்றால் மற்றொரு புறம் காங்கிரசும் திமுக என்ன சொல்லும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி நீடிக்கிறது என்று சொன்னாலும் கூட தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.  சொற்பமான தொகுதிகளை மட்டுமே காங்கிரசிற்கு திமுக தலைமை கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் காங்கிரஸ் தரப்பு சோகமாக உள்ளது. அதேசமயம், திமுகவை விட்டு பிரியவும் முடியாது.. பிரிந்தால் அது தற்கொலைக்குச் சமமாகி விடும்.




கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பாஜக - காங்கிரசின் நிலைமை இது தான். மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தான் தேசிய கட்சிகளுக்கு எதிர்காலம் என்ற நிலை உள்ளது. இதனால் வடக்கில் பலமாக இருந்தாலும் தெற்கில் தங்களின் நிலை என்ன ஆகுமோ என்ற பயம் பாஜக.,விடம் இருந்து கொண்டு தான் உள்ளது. தனித்து போட்டியிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என அவர்களுக்கும் தெரியும். இதனால் தெற்கில் என்ன செய்து தங்களை பலமாக்குவது என தெரியாமல் விழி பிதுங்கி போய் உள்ளது பாஜக. 


கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோரை தாண்டியும் பாஜக.,வால் ஒன்றும் செய்ய முடிவில்லை. இங்கு இவர்கள் எடுக்க போகும் முடிவு தான் தெற்கில் பாஜக.,வின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்