நாடாளுமன்ற தேர்தல்: திமுக விருப்பமனு வழங்குவது இன்றுடன் முடிந்தது.. 915 விண்ணப்பங்கள் குவிந்தன

Mar 07, 2024,05:53 PM IST

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை வழங்குவது இன்றுடன் முடிந்தது. இனி அடுத்து நேர்காணல் நடைபெறவுள்ளது.


2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கட்சிகளின் கூட்டணி குறித்த முடிவுகளும் விரைவில் வெளி வர உள்ளன. திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை மார்ச் மாதம்  1ம் தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கி வந்தனர்.


திமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் துறை முருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.2.2024 முதல் தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.போட்டியிட விரும்புகின்றவர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 1.3.2024 முதல் 7.3.2024 மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் -ரூ 50,000. விண்ணப்ப படிவத்தை தலைமை கழகத்தில் ரூபாய் 2000 விதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். 


இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் விருப்ப மனு வழங்குவது முடிவுக்கு வந்தது. அவகாசம் முடிந்த நிலையில், மொத்தம் 915 பேர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.  இதையடுத்து தொகுதி வாரியாக இனி நேர்காணல் நடைபெறும். அப்போது விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் டி.ஆர். பாலு, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ ராசா உள்ளிட்ட பலரும் நேரடியாக வந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்