தமிழ்நாட்டில் திமுக அலை.. 39 தொகுதிகளையும் அள்ளும்.. இந்தியா டுடே தி மூட் ஆப் தி நேஷன் சர்வே

Feb 08, 2024,05:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய தி மூட் ஆப் தி நேஷன்  கருத்துக்  கணிப்பு கூறியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அதிமுக உள்ளிட்ட பிற கூட்டணிகளும் பெரும் தோல்வியைத் தழுவும் என்றும் அது தெரிவித்துள்ளது.


கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வென்று.. தேனியில் மட்டும் தோல்வியைத் தழுவியது என்பது நினைவிருக்கலாம். அப்போது அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தன.


லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களும் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகின்றன. அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. நேற்று டைம்ஸ் நவ் சார்பிலான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 2 தொகுதிகளும், பாஜகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




ஆனால் இன்று வெளியான இந்தியா டுடே தி மூட் ஆப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் மொத்த தொகுதிகளையும் திமுக கூட்டணியே அள்ளப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா டுடே இதழின் சார்பில் தி மூட் ஆப் தி நேஷன் என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான கணிப்புகளை அது வெளியிட்டுள்ளது. மொத்தம் 35,380 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பானது 2023 டிசம்பர் 15 க்கும் 2024 ஜனவரி 28ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.


இந்த கருத்துக்கணிப்பின்படி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் பார்க்கும்போது திமுக கூட்டணிக்கு 39 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அது தோல்வியை சந்தித்தது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அப்போது ஒரு இடம் மட்டும் கிடைத்தது, அதாவது தேனி தொகுதியில் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 


தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஒபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியது.   கடந்த 2019 தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 12 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த முறை 15 சதவீத வாக்குகளை அது பெறுமாம். அதாவது கடந்த முறையை விட இந்த முறை 3 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்குமாம். திமுக கூட்டணிக்கு கடந்த முறை  53 சதவீத  வாக்குகள் கிடைத்த நிலையில் இந்த முறை 6 சதவீத வாக்குகள் குறைந்து 47 சதவீத வாக்குகள் கிடைக்குமாம். மற்ற கட்சிகள் கடந்த முறை 35 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில் இந்த முறை 38 சதவீத வாக்குககளைப் பெறுமாம்.


கடந்த முறை போலவே, இந்த முறையும் திமுக கூட்டணி மொத்த தொகுதிகளையும் அள்ளும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்