நெல்லை தொகுதி காங்கிரசிற்கா?.. செம கடுப்பில் நெல்லை திமுக.. குஷியில் பாஜக.. "அல்வா" யாருக்கோ??

Mar 19, 2024,05:31 PM IST

நெல்லை : திமுக கூட்டணியில் நெல்லை லோக்சபா தொகுதி காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இது திமுகவினர் இடையே, குறிப்பாக சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த நிர்வாகிகளிடையே, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். அதே சமயம் நெல்லையில் போட்டியிடக் காத்திருக்கும் பாஜக.,விற்கு செம கொண்டாட்டமாகி உள்ளதாம்.


விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை லோக்சபா தொகுதியில்,  திருநெல்வேலி, ஆலங்குளம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதுவரை நெல்லை லோக்சபா தொகுதிக்கு 17 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் 7 முறை அதிமுக தான் வென்றுள்ளது. இதில் 4 முறை அதிமுக சார்பில் கடம்பூர் ஜனார்த்தனன் தான் எம்.பி.,யாக இருந்துள்ளார். 


திமுக எம்.பி. ஞான திரவியம்




கடந்த லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் 50 சதவீதம் ஓட்டுக்களை பெற்று திமுக வேட்பாளர் ஞான திரவியம் எம்.பி.,யானார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். கிட்டதட்ட 1.85 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஞான திரவியம் வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் லோக்சபாவில் ஆக்டிவாக செல்பட்ட எம்.பி.,க்களில் இவரும் ஒருவர். 


நெல்லை தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து மக்களிடம் நல்ல மதிப்பையும், பெயரை சம்பாதித்து வைத்துள்ளார். நெல்லை மக்களுக்காக பார்லிமென்டில் குரல் கொடுத்த தமிழர் என இந்த தொகுதி மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இதனால் நெல்லை தொகுதியில் திமுக.,விற்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. திமுகவினரும் பெருத்த நம்பிக்கையில் இருந்து வந்தனர்.


காங்கிரஸுக்கு நெல்லை




ஆனால் இந்த முறை நெல்லை தொகுதியில் திமுக போட்டியிடாமல் அந்த தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஒதுக்கி உள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு நெல்லை மாவட்ட திமுக.,வினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஈஸியாக நாம் ஜெயிக்கக் கூடிய தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்து விட்டார்களே என்று அவர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனராம். 


அது மட்டுமல்ல இந்த முறை நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன், அதிமுக, திமுக என பல கட்சிகளில் இருந்து பாஜக.,விற்கு சென்றவர். இவருக்கு நெல்லை மட்டுமல்ல நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம்.  இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அது தொண்டர்களிடையே மன ரீதியாக பலவீனத்தையே ஏற்படுத்தும் என்று திமுகவினர் கருதுகின்றனர்.


டீம் நைனார் நாகேந்திரன் ஹேப்பி




நெல்லை மாவட்டத்தில் தங்களுக்கு எவ்வளவு பலம் உள்ளது என நன்கு தெரிந்தும் திமுக எதற்காக காங்கிரசிற்கு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்தது என தெரியாமல் கட்சி தொண்டர்கள் குழம்பி உள்ளனர். ஆனால் இந்த திமுக போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சி நெல்லையில் போட்டியிட உள்ளது பாஜக.,விற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையை பொறுத்தவரை அதிமுக, திமுக அளவிற்கு காங்கிரசிற்கு செல்வாக்கு கிடையாது. அப்படியே இருந்தாலும் நையினார் நாகேந்திரன் அளவிற்கு செல்வாக்கான வேட்பாளர் காங்கிரசில் எவரும் கிடையாது. 


திமுக கூட்டணி என்பதால் மக்கள் காங்கிரசிற்கு ஓட்டளிக்கலாம். அதே சமயம் ஜாதி ஓட்டுக்கள், கட்சி ஓட்டுக்கள் என பலவற்றை ஒப்பிட்டு பார்த்தால் நைனார் நாகேந்திரனுகே இந்த முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாய வாக்குகள் தற்போது பிரியக் கூடிய வாய்பப்புகள் அதிகமாக உள்ளன. திமுகவில் உள்ள நாடார் சமுதாய வாக்குகள் முழுமையாக காங்கிரஸுக்குப் போகுமா என்பதும் சந்தேகம் என்று சொல்கிறார்கள். 


கூட்டணியில் தொகுதிப் பங்கீடு வரும்போது சில தொகுதிகளை விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதால் திமுகவினர் இந்த வருத்தத்திலிருந்து வெளியே வந்து முழுமையாக காங்கிரஸுக்கு வாக்கு சேகரிப்பார்கள் என்ற நம்பிக்கை + எதிர்பார்ப்பில் காங்கிரஸார் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்