லோக்சபா தேர்தல் 2024.. ஏற்பாடுகள் தயார்.. தமிழ்நாடு, புதுவையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

Mar 19, 2024,06:34 PM IST

சென்னை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.


தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதே நாளில் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து நாளை இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


வேட்பு மனு தாக்கலையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இதுகுறித்த ஒரு பார்வை:




- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி  இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியும்.


- வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று தனது வேட்பு மனுவை சமர்ப்பிக்க வேண்டும்.


- விடுமுறை நாட்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது. 


- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. அங்கீகரிக்கப்படாத, அதேசமயம், பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளராக அல்லது சுயேச்சையாக இருந்தால் அவரது வேட்பு மனுவை பத்து பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். முன்பொழிபவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக இருக்க வேண்டியது அவசியம்.


- முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.


- தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தாங்கள் எஸ்சி அல்லது எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.




- ஒரு வேட்பாளர் அதிகபட்சம் நான்கு வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கலாம். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.


- லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பொதுப் பிரிவு வேட்பாளர்கள் ரூ. 25,000 டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும். வேட்பாளர்கள் எஸ்டி அல்லது எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் டெபாசிட் தொகை ரூ. 12,500 ஆகும். தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்றால் இந்த டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும். குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறத் தவறினால் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்காது.


- ஆன்லைனிலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்திற்குள் போய் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம். அதில் வேட்பு மனுவை சமர்ப்பித்த பின்னர் அதன் பிரின்ட் அவுட்டை எடுத்துக் கொண்டு, நோட்டரி பப்ளிக்கிடம் அட்டஸ்டேஷன் பெற்று பிறகு, உரிய ஆவணங்களை இணைத்து அதை கொண்டு போய் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து விட்டால் போதுமானது. இதற்கான இணையதளம் https://suvidha.eci.gov.in/pc/public/login


தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகள்


தமிழ்நாட்டில் 30 மக்களவைத் தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் உள்ளன. இந்த 40 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே தேர்தல் அதிகாரி அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.  மார்ச் 30ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

சமீபத்திய செய்திகள்

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்