சென்னை: வாக்குச் சாவடியில் கூட்டம் எப்படி இருக்கிறது, எத்தனை பேர் வரிசையில் காத்திருக்காங்க என்ற விவரத்தை அறிய தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்தபடியே பூத்தில் இருக்கும் கியூவை அறிந்து கொண்டு அதற்கேற்ப வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லலாம்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திருவிழா நாளை தொடங்குகிறது. 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியும் அடக்கம்.
வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. வாக்குச் சாவடிகளில் அந்தந்த தேர்தல் பணியாளர்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விடிந்தால் கல்யாணம் என்பது போல நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்காக தொடர்ந்து செய்து வருகிறது தேர்தல் ஆணையம் .
வரிசையில் எத்தனை பேர் காத்திருக்காங்க?
வாக்காளர்கள் தத்தமது வாக்குச் சாவடியில் எத்தனை பேர் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்கள், கியூ பெரிதாக இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து அறிய புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளத்துக்குப் போய் பூத்தில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறுகையில், வாக்காளர்களின் வசதிக்காக மக்களவை தேர்தல் 2024க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலை அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
பூத் ஸ்லிப் வேண்டுமா?.. இதை பயன்படுத்துங்க
பலருக்கு பூத் ஸ்லிப் கிடைத்திருக்காது. இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருப்பதுதான் முக்கியம். வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப நமது வாக்குச் சாவடி குறித்த விவரத்தையும் அறிய https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி பூத் ஸ்லிப் குறித்த தகவல்களைப் பெற முடியும்.
ஓட்டுப் போடுங்க.. அப்படியே செல்பியும் எடுங்க
மறுபக்கம் சென்னை மாநகராட்சி ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள அணைத்து வாக்கு சாவடிகளிலும் Selfie Booth-கள் வைக்கப்பட்டுள்ளன. "Vote போடுங்க.. Selfie எடுத்து Post போடுங்க!" கூடவே @chennaicorp Tag பண்ணுங்க என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிறகென்ன ஜாலியா போய் ஓட்டுப் போட்டுட்டு அப்படியே ஜம்முன்னு ஒரு செல்பியையும் எடுத்து போட்டு விடுங்க.. உங்களைப் பார்த்து நாலு பேருக்கும் ஓட்டுப் போடும் ஆசை வரும் இல்லையா.. !
தேர்தல் திருவிழாவை அமர்க்களமாக கொண்டாடுங்க மக்களே.. மறக்காமல் ஓட்டுப் போடுங்க.. ஜனநாயகத்தை வலுப்படுத்துங்க!
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}