சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 19 ஆம் தேதி முதல் விண்ணுப்பங்களை அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இப்போதே பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச ஆரம்பித்து விட்டனர். முக்கியக் கட்சிகள் அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளது. மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் சூடாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வேட்பாளர் விருப்ப மனுக்களை வரவேற்றுள்ளது திமுக.
திமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று திமுக பொதுசெயலாளர் துறை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 19.2.200 4 முதல் தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 1.3. 2024 முதல் 7. 3.2024 மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் -ரூ 50,000. விண்ணப்ப படிவத்தை தலைமை கழகத்தில் ரூபாய் 2000 விதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}