லோக்சபா தேர்தல்..  3 முக்கியக் குழுக்களை அறிவித்து..  பணிகளுக்கு "பெரியார் சுழி" போட்டது.. திமுக

Jan 19, 2024,07:06 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் 2024க்கான முன்னேற்பாடுகளில் திமுக களம் இறங்கியுள்ளது. முக்கியமான 3 குழுக்களை அறிவித்து தனது தேர்தல் பணிகளுக்கு அது "பெரியார் சுழி" போட்டுள்ளது.


லோக்சபா தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாக தொடங்கியுள்ளன.  தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு பக்கம் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுக்களைத் தொடங்கியுள்ளது. பாஜக தனது தரப்பு முஸ்தீபுகளையும் தொடங்கி வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் தொடர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளார். 


இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தேர்தல் பணிக்குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. இப்போது திமுகவும் தனது தரப்பிலிருந்து 3 முக்கியக் குழுக்களை அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளை இதன் மூலம் திமுகவும் முழு வீச்சில் தொடங்கி விட்டது.




திமுக  எம்.பி. கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலில் எப்போதுமே திமுகவுக்கு துருப்புச் சீட்டாக இருப்பது தேர்தல் அறிக்கைதான். தற்போது தேசிய அளவில் திமுக மிக முக்கியக் கட்சியாக இருப்பதால் லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையையும் அட்டகாசமாக தயாரிக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் மிகப் பெரிய டீமை இதற்காக களம் இறக்கியுள்ளது.


நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த திமுகவின் வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே நிலவி வரும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை பெரிதாகவே அறிவித்துள்ளது திமுக மேலிடம்.


திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு விவரம்:




கனிமொழி கருணாநிதி

டிகேஎஸ் இளங்கோவன்

ஏகேஎஸ் விஜயன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

டிஆர்பி ராஜா

கோவி செழியன்

கேஆர்என் ராஜேஷ்குமார்

சிவிஎம்பி எழிலரசன்

எம்எம் அப்துல்லா

எழிலன் நாகநாதன்

மேயர் பிரியா


கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்  குழு:




அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு தலைமையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு, இடப் பங்கீடு தொடர்பான முக்கியமான விஷயங்களை இந்தக் குழு கவனிக்கும். டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் இடம் பெற்றிருப்போர் விவரம்:


டி.ஆர்.பாலு

கே.என். நேரு

இ. பெரியசாமி

க.பொன்முடி

ஆ.ராசா

எம்ஆர்கே பன்னீர் செல்வம்


தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழு:




அடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் முக்கியக் கட்சிகளாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் புதிதாக ஏதேனும் கட்சிகள் சேருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்