வெத்தல பாக்கு மாத்திட்டோம்.. வேட்பாளர்கள் யார் என்பதை பிறகு சொல்வோம்.. பிரேமலதா விஜயகாந்த்

Mar 21, 2024,10:38 PM IST

சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களையும் கூடிய விரைவில் அறிவிப்போம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் லிஸ்ட் வரவில்லை.


முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக தலைவர்களும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் மறைந்த விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.  




அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,  கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது. கூட்டணி அமைத்திருக்கிறோம். அரும்பாடுபட்டு 5 தொகுதிகளைப் பெற்றுள்ளோம். ஐந்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். இரவு பகலாக உழைக்க வேண்டும்.  அதிமுக எப்படி அம்மா இல்லாமல் முதல் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறதோ, அதேபோல கேப்டன் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. 


கேப்டனுக்கு ரோல் மாடல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் கேப்டன் ஆகிய தெய்வங்களின் ஆசிர்வாதத்துடன் நாளை நமதே 40ம் நமதே என்று கூட்டணி தர்மத்தோடு நடந்து கொண்டு அத்தனை தொகுதிகளிலும் வென்றெடுத்து சரித்திரத்தை மாற்றியமைக்க வேண்டும். 2026ம் ஆண்டு, 2011 சரித்திரத்தை மீண்டும் நிரூபிப்போம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், மார்ச் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித்  தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளோம். அப்போது 40 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தவுள்ளனர். அப்போது முதல் பிரச்சாரக் கூட்டம் தொடங்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.


அப்போது செய்தியாளர்கள், வேட்பாளர் பட்டியல் குறித்து கேட்டபோது, வெத்தலை பாக்கு மாத்திட்டோம்.. அடுத்து வேட்பாளர்கள் யார் என்பதையும் அறிவிப்போம்.. பொறுமையா இருங்க. சொல்வோம். நேர்காணல் நடந்து வருகிறது. முடிந்ததும் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம். திருச்சி கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விட்டு, மார்ச் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.


ராஜ்யசபா சீட்டும் கொடுக்கிறதா அதிமுக


பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டியின்போது கூறுகையில், ராஜ்யசபா சீட்டுக்கான வேட்பாளர் யார் என்பதையும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். ஒரு ஃபுளோவில் அவர் இதைச் சொன்னாரா அல்லது அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட் தர ஒப்புக் கொண்டுள்ளதை சூசகமாக சுட்டிக் காட்டினாரா என்று தெரியவில்லை.


எப்போது தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து தேமுதிக பேசினாலும் கூடவே ராஜ்யசபா சீட் மஸ்ட் என்பதையும் வலியுறுத்தியே வந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தந்ததே இல்லை. ஆனால் இப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பதைப் பார்த்தால் இந்த முறை சீட் கிடைத்து விடும் போல தெரிகிறது. 


அப்படியானால் அந்த ராஜ்யசபா சீட் மூலமாக நாடாளுமன்றத்திற்குப் போகப் போவது பிரேமலதா விஜயகாந்தா அல்லது சுதீஷா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்