2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. தருண் கோகோய், அசோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு சீட்

Mar 12, 2024,06:48 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சி 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 43 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப்  பட்டியலில் 3 மூத்த முக்கியத் தலைவர்களின் மகன்களுக்கு சீட் தரப்பட்டுள்ளது.


அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், முன்னாள் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயின் மகன் கெளரவ் கோகோய், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் ஆகியோருக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுத்துள்ளது.


அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்கள் மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்துக்கான வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.




அஸ்ஸாமில் 12 வேட்பாளர்களும், குஜராத்தில் 7 வேட்பாளர்களும், மத்தியப் பிரதேசத்தில் 10,  ராஜஸ்தான் 10,  உத்தரகாண்ட் 3 மற்றும் டாமன் டையூவுக்கு ஒரு வேட்பாளர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


43 பேரில் 10 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 33 பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். 25 பேர் 50 வயதுக்கு உட்பட்டோர், 8 பேர் 51 முதல் 60 வயதுக்குட்பட்டோர். 10 பேர் 61 முதல் 70 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் ஆவர்.


மொத்த வேட்பாளர்களில் 76.7 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்