சென்னை: அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 25 தொகுதிகளில் அதிமுக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். இது திமுக போட்டியிடுவதாக கூறப்படும் தொகுதிகளை விட அதிகமாகும்.
தமிழ்நாட்டில் தற்போது திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் உருவாகின்றன. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் இப்போதைக்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஏதாவது கூட்டணியில் இணைந்தால் நான்கு முனையாக இது நீடிக்கும். ஒரு வேளை மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டால், 5 முனைப் போட்டியாக அது மாறும்.
இதுதவிர அமமுக, ஓ.பி.எஸ் ஆகியோரின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகவில்லை. அனேகமாக பாஜக கூட்டணியில் இவர்கள் இணையலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள்.
இதற்கிடையே, அதிமுகவில் யாருக்கு எத்தனை சீட் என்ற விவரம் லீக்காகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்கதான்.. ஆனால் இப்படித்தான் கூட்டணி இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதன்படி அதிமுக புதுச்சேரி உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாம். (திமுக 20 அல்லது 21 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று ஏற்கனவே ஒரு டாக் உள்ளது). இதுதவிர கூட்டணிக் கட்சிகளான எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு திருநெல்வேலி, புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மயிலாடுதுறை, தென்காசி (தனி) தொகுதி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு அளிக்க அதிமுக தீர்மானித்துள்ளதாக சொல்கின்றனர்.
இந்த ஐந்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னமானது 30 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ளது.
இதுதவிர பாமகவுக்கு 6 முதல் 7 தொகுதிகள் வரையும், தேமுதிகவுக்கு 3 முதல் 4 தொகுதிகள் வரையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாம். இந்த இரு கட்சிகளுக்கும் ராஜ்யசபா சீட் கிடைக்க வாய்ப்பில்லையாம். காரணம், அதிமுகவிடம் அதற்கான பலம் இல்லை என்பதால்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}