புயல் வேகத்தில் தொகுதிப் பங்கீடு.. டெல்லியில் "ஸ்வீட் ஷாக்".. 3 காங்கிரஸுக்கு, 4 ஆம் ஆத்மிக்கு!

Feb 22, 2024,07:25 PM IST

டெல்லி: டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றைக் கூட தர முடியாது என்று அடம் பிடித்து வந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது காங்கிரஸுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது  பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி பல படி இறங்கி வந்திருப்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவை பலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.




சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியை தேர்தல் அதிகாரி ரூபத்தில் பறித்து விட்டாலும் கூட, சுப்ரீம் கோர்ட் தலையிட்டு ஆம் ஆத்மியை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு வடக்கில் கிடைத்த முதல் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில்தான் தற்போது டெல்லி தொகுதிப் பங்கீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இங்கு பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டன. இதில் பாஜக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவின.


இதில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் 2ம் இடத்தைப் பிடித்தது. 2 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2வது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 22.5 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 18.1 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பாஜகவுக்கு 57 சதவீத வாக்குகள் கிடைத்தன.


வருகிற லோக்சபா தேர்தலில் தாங்கள் 7 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக முதலில் ஆம் ஆத்மி கூறி வந்தது. பின்னர் இந்தியா கூட்டணியில் இணைந்த பிறகு ஒரு தொகுதியை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுத் தருவோம் என்று கூறியது. இந்த நிலையில்தான் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மேலும் சில படிகள் இறங்கி 3 தொகுதிகளை அது ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுவது என்று டீல் ஏற்பட்டுள்ளதாம்.  இதுதவிர சண்டிகர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிகிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்குமாம். இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சிக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  உ.பி. தொகுதிப் பங்கீடும், டெல்லி ஒப்பந்தமும் டக்கென முடிந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  இதேபோல பஞ்சாபிலும் விரைவில் சுமூகமாக உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்