அதிமுக -தேமுதிக இடையே 3ம் கட்ட பேச்சு வார்த்தை.. இன்றாவது உடன்பாடு ஏற்படுமா?

Mar 16, 2024,07:05 PM IST

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையேயான 3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.


மக்களவைத் தேர்தலுக்கு தேதி சொல்லி விட்டார்கள். திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட எல்லாம் முடிந்து விட்டது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் இறுதி வடிவம்தான் இன்னும் தெரியாமல் உள்ளது. 


அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று 3வது சுற்றுப் பேச்சுவார்தை மாலை 6 மணிக்கு  தொடங்கியது.




இரு கட்சிகளுக்கு இடையே மார்ச் 1ஆம் தேதி  முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் அதிமுக-தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 6ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. 


இந்நிலையில், இன்று மாலை  3ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது.  இன்றாவது உடன்பாடு ஏற்படுமா என்ற அயர்ச்சியில் இரு கட்சியினரும் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

இரத்தக்களறி (சிறுகதை)

news

4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்