கூட்டணி ரெடி.. பாஜகவுக்கு எத்தனை.. பாமக என்னாகும்.. ஓபிஎஸ்ஸுக்கு ஏதாவது கிடைக்குமா?

Apr 27, 2023,12:35 PM IST
சென்னை: பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி விட்டார். இதைத் தொடர்ந்து பாஜகவுக்கு எத்தனை சீட்களை அதிமுக தூக்கித் தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.

முதல்ல 2014ம் ஆண்டுக்குப் போக வேண்டும்...

"மோடியா லேடியா.. பார்த்து விடுவோம்"... சிங்கம் போல கர்ஜனை செய்து 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு பாஜகவையும், திமுகவையும் சேர்த்து அதிர விட்டார் ஜெயலலிதா. தனித்து களம் கண்ட ஜெயலலிதாவைப் பார்த்து ஒட்டு மொத்த தேசமும் மிரண்டது. என்ன இப்படி முடிவெடுத்து விட்டார் ஜெயலலிதா.. ஜெயித்து விடுவாரா என்ற கேள்விகள் சரமாரியாக வலம் வந்தன.

மறுபக்கம் பலவீனமான கூட்டணியை அமைத்தது திமுக. 34 இடங்களை அது எடுத்துக் கொண்ட மீதம் உள்ள இடங்களை புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள்,  மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியோருக்குக் கொடுத்தது.



பாஜக தனிக் கூட்டணி அமைத்தது. தேமுதிக (14), பாமக (8), பாஜக (7), மதிமுக (7),  இந்திய ஜனநாயகக் கட்சி,  கொமதேக, புதிய நீதிக் கட்சி தலா 1 இடங்களில் போட்டியிட்டன.

காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது. தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் அது தனித்துப் போட்டியிட்டது. அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எந்த கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் ஆளுக்கு 9 சீட் என பிரித்துக் கொண்டு தனியாக போட்டியிட்டன.

ஜெயலலிதாவின் அதிரடி அரசியலை இந்த தேர்தலில் தமிழ்நாடு பார்த்தது. சூறாவளி போல தமிழ்நாடு முழுக்க சுழன்ற ஜெயலலிதா, மோடி அலையை முறியடித்து தூக்கிப் போட்டு பாஜகவை மிரட்டி விட்டார். ஒட்டுமொத்த தமிழகமும் ஜெயலலிதா பின்னால் அணிவகுத்தது. 37 இடங்களில் இரட்டை இலையை மலர விட்டு தேசிய அரசியலை அலற விட்டார் ஜெயலலிதா. பாஜகவுக்கும், பாமகவுக்கும் தலா ஒரு வெற்றி கிடைத்தது. திமுக கூட்டணி துடைத்தெடுக்கப்பட்டு விட்டது.

அப்படியே திரும்பினால் 2019.. ஜெயலலிதா மறைந்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர் செல்வம் கூட்டுத் தலைமையில் தேர்தலை சந்தித்தது அதிமுக. மோடியா லேடியா என்று கடந்த தேர்தலில் மிரட்டிய அதிமுக, இந்த தேர்தலை "மோடி எங்க டாடி" என்ற வினோதமான கோஷத்துடன் சந்தித்தது. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் அக்கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட்டது.  பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4,  புதிய தமிழகம், தமாகா, புதிய நீதிக் கட்சி தலா  1 சீட்டில் போட்டியிட்டன. 

மறுபக்கம் திமுக கூட்டணி பலமான அணியை அமைத்தது. திமுக 20,  காங்கிரஸ், 9, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, முஸ்லீம்லீக், மதிமுக,  கொமதேக ஆகியோர் தலா 1 சீட்டில் போட்டியிட்டனர். 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக தனித் தனியாக போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் அப்படியே 2014க்கு தலைகீழாக வந்து சேர்ந்தது. திமுக கூட்டணி அதிரடியாக 38 தொகுதிகளை அள்ளி வென்றது. அதிமுகவுக்கு ஒரு இடம் மட்டுமே. மற்ற அத்தனை பேரும் தோற்றுப் போனார்கள்.

இப்போது 2024.. அதிமுக மிகவும் பலவீனப்பட்டு நிற்கிறது. பாஜகவோ தலைக்கு மேலே ஏறி கெடுபிடி செய்ய ஆரம்பித்துள்ளது. ஓபிஎஸ் பிரிந்து போய் விட்டார்.. தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். தன்னை நிரூபித்தாக வேண்டிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். கடந்த முறை கொடுத்த  7 சீட் போதாது, அப்படியே இரட்டைப் படையில் வேண்டும் என்று பாஜக நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி எத்தனை சீட் தரப் போகிறார் என்று தெரியவில்லை.

பாஜக பல முக்கிய தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது.. அதற்கெல்லாம் அதிமுக பணிந்து போகுமா.. 
பாமக நிலை என்ன.. யாருடைய  கூட்டணியில் பாமக நிற்கும்.. எத்தனை சீட் கிடைக்கும்.. தேமுதிக என்னாகும்..  பாஜக தனக்குக் கொடுக்கும் தொகுதிகளிலிருந்து ஓபிஎஸ்ஸுக்குப் பிரித்துக் கொடுக்குமா.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அணிவகுக்கின்றன.

பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்