லோக்சபா தேர்தல் 2024: பிரதமர் மோடி சொன்ன 400 தொகுதிகள் கிடைக்குமா?.. பரபரப்பான டைம்ஸ் நவ் சர்வே!

Feb 08, 2024,05:46 PM IST

டில்லி : 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்தில் எந்ததெந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும்? மக்களின் ஆதரவு எந்த கட்சிக்கு உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களை டைம்ஸ் நவ் மாட்ரிஸ் என்சி சர்வே வெளியிட்டுள்ளது.


பல முக்கிய தலைப்புகளின் கீழ் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதனால் மாநில, தேசிய அரசியல் களம் சூடாகியுள்ளது.


2024 லோக்சபா தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நேரத்திலும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் Matrize NC இணைந்து மாநில வாரியாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 




இதன் முழு விபரம் இதோ...


ஆந்திரா ( மொத்தம் 25 சீட்) :


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 19

தெலுங்கு தேசம் - ஜன சேனா - 6

காங்கிரஸ் - 0

பாஜக - 0 

மற்றவை - 0


தெலுங்கானா (மொத்தம் 17) :


காங்கிரஸ் - 9

பாஜக - 5

பிஆர்எஸ் - 2

ஏஐஎம்ஐஎம் - 1

மற்றவை - 0


கர்நாடகா (மொத்தம் 28) :


பாஜக - 21

காங்கிரஸ் - 5

மதசார்பற்ற ஜனதா தளம் - 2

மற்றவை - 0


மகாராஷ்டிரா (மொத்தம் 48) :


பாஜக கூட்டணி - 39

எம்விஏ - 9

மற்றவை - 0


அசாம் (மொத்தம் 14)


பாஜக கூட்டணி - 11

காங்கிரஸ் கூட்டணி - 1

ஏஐயூடிஎஃப் - 1

மற்றவை - 1




தமிழ்நாடு (மொத்தம் 39)


பாஜக - 1

இந்தியா கூட்டணி - 36

அதிமுக - 2

மற்றவை - 0


மேற்கு வங்கம் (மொத்தம் 42)


திரிணாமுல் காங்கிரஸ் - 26

பாஜக - 15

காங்கிரஸ் கூட்டணி - 1

மற்றவை - 0


ஒடிசா (மொத்தம் 21)


பிஜூ ஜனதா தளம் - 9

பாஜக - 11

காங்கிரஸ் - 1

மற்றவை - 0


ஜார்கண்ட் (மொத்தம் 14)


பாஜக கூட்டணி - 13

இந்தியா - 1

மற்றவை - 0


பீகார் (மொத்தம் 40)


பாஜக கூட்டணி - 35

இந்தியா - 5

மற்றவை - 0


சத்தீஸ்கர் (மொத்தம் 11)


பாஜக - 11

காங்கிரஸ் - 0

மற்றவை - 0


குஜராத் (மொத்தம் 26)


பாஜக - 26

காங்கிரஸ் - 0

ஆம்ஆத்மி கூட்டணி - 0

மற்றவை - 0


ராஜஸ்தான் (மொத்தம் 25)


பாஜக - 25

காங்கிரஸ் - 0

மற்றவை - 0


அரியானா (மொத்தம் 10)


பாஜக - 9

காங்கிரஸ் - 1

மற்றவை - 0


பஞ்சாப் (மொத்தம் 13)


ஆம்ஆத்மி - 05

பாஜக - 03

காங்கிரஸ் - 03

எஸ்ஏடி - 01

மற்றவை - 0


டில்லி (மொத்தம் 7)


பாஜக - 7

ஆம்ஆத்மி - 0

காங்கிரஸ் - 0

மற்றவை - 0


இமாச்சல பிரதேசம் (மொத்தம் 4)


பாஜக - 3

காங்கிரஸ் - 1

மற்றவை - 0


மத்திய பிரதேசம் (மொத்தம் 29)


பாஜக - 28

காங்கிரஸ் - 01

மற்றவை - 0


உத்திரகாண்ட் (மொத்தம் 5)


பாஜக - 5

காங்கிரஸ் - 0

மற்றவை - 0


சரி பிரதமர் மோடி சொன்ன 400 சீட் கிடைக்குமா?




நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 சீட் கிடைக்கும், இதில் பாஜகவுக்கு மட்டும் 370 இடங்கள் வரை கிடைக்கும் என்று அடித்துப் பேசியிருந்தார். இது சர்ச்சையையும் கிளப்பியது.


டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் இதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த முறை 366 சீட் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 104 இடங்கள் கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 73 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்