"வார் ரூம்" ரெடி.. கர்நாடக தேர்தலின் "ஹீரோ" சசிகாந்த் செந்தில் தலைமையில்.. காங்கிரஸ் அதிரடி!

Jan 06, 2024,06:45 PM IST

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு போர் வேகத்தில் தயாராக ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. சசிகாந்த் செந்தில் தலைமையில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.


சசிகாந்த் செந்திலை யாரும் மறந்திருக்க முடியாது.. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அட்டகாசமான வெற்றியைத் தேடிக் கொடுக்க தீவிரமாக உழைத்தவர்தான் சசிகாந்த் செந்தில்.


முன்னால் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடகத்தில் பணியாற்றியவர். பின்னர் தனது வேலையை விட்டு விட்டு காங்கிரஸில் இணைந்தார். இவரது தலைமையில்தான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிரடி காட்டியது.




கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசார உத்திகள், ராகுல் காந்தியின் பிரசார உத்தி உள்ளிட்டவற்றை வகுத்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து அழகாக வடிவமைத்தது செந்தில் தலைமையிலான குழுதான். பாஜகவின் பல்வேறு அஸ்திரங்களையும் தகர்த்து இந்தக் குழு அமைத்துக் கொடுத்த வியூகத்தால்தான் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை கர்நாடகத்தில் பெற முடிந்தது.


தற்போது சசிகாந்த் செந்திலின் பணியை மிகப் பெரிய அளவுக்கு மாற்றியுள்ளது காங்கிரஸ் மேலிடம். அவரை லோக்சபா தேர்தலுக்கான வார் ரூம் தலைவராக நியமித்துள்ளால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.  அதாவது நாடு முழுமைக்குமான உத்திகளை வகுக்கும் மிகப்பெரிய பொறுப்பு சசிகாந்த் செந்தில் டீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.


நிர்வாக வார் ரூம் மற்றும் தகவல் தொடர்பு வார் ரூம் என இரு குழுக்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதில் நிர்வாக வார் ரூமின் தலைவராக சசிகாந்த் செந்தில் செயல்படுவார். தகவல் தொடர்பு வார் ரூமின் தலைவராக வைபவ் வாலியா செயல்படுவார்.


சசிகாந்த் செந்தில் குழுவில், கோகுல் புடையில், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் துணைத் தலைவர்களாக செயல்படுவார்கள்.


சசிகாந்த் செந்தில் தலைமையில் மத்திய வார் ரூம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்