லோக்சபா தேர்தல் 2024 : 96 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

May 11, 2024,04:01 PM IST

 டெல்லி: 4ம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு 96 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இத்தொகுதிகளில் வருகின்ற 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 4ம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 13ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர் மீதமுள்ள  3 கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 20,25 மற்றும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளன. அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிந்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


இந்நிலையில் 4ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரதேசங்கள் உட்பட 96 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகின்றது. ஆந்திராவில் 25 தொகுதிகள், மகாராஷ்டிாவில் 11 தொகுதிகள்,ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்திரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள்,பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள்  உள்ளிட்ட 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 4ம் கட்ட தேர்தல் நடைபெறும் 96 தொகுதிகளிலும், மொத்தம் 4,264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 




நாளை மறு நாள் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையமும் தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்