Loksabha Election 2024.. இத்தனை சீட் வேண்டும்.. அதிமுகவை நெருக்கும் பாஜக!

Sep 16, 2023,05:21 PM IST

- மீனாட்சி


சென்னை: நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் பாஜக திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2019 நாடாளுமன்றத் தேர்தலில்  அதிமுக கூட்டணியானது பலத்த இழுபறி, மோதல்கள், முட்டல்கள், உரசல்களுக்கு மத்தியில் இறுதியானது. அக்கூட்டணியில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றன. இதில் அதிமுக 20 இடங்களிலும், பாமக 7, பாஜக 5, தேமுதிக 4 மற்றவை தலா 1 என்று போட்டியிட்டன. போட்டியிட்ட அனைவருமே தோற்ற நிலையில், அதிமுகவின் ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் மட்டுமே வென்று ஆறுதல் அளித்தார்.




அந்தத் தேர்தலில் இபிஎஸ் மற்றும் ஓபிஸ் ஆகியோர் இணைந்திருந்தனர். தினகரன் மட்டுமே தனித்து இயங்கி வந்தார்.  பல தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு டஃப் கொடுத்தும் கூட அதிமுக கூட்டணியால் சாதிக்க முடியாமல் போனது. இப்போது அதிமுக மேலும் பலவீனமடைந்துள்ளது. .ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட்டு விட்டார். அவர் இல்லாத நிலையில் தென் மாவட்டங்களில் எப்படி அதிமுக சாதிக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து போட்டியிட தீர்மனித்து உள்ளனர். ஆனால், மாநில அளவில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும், வார்த்தை மோதல்களும் இருந்து வருகின்றன. இதனையெல்லாம் தாண்டி தேசிய தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றனர்.


இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பாஜக தலைவர் ஜேபி. நட்டாவையும் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்தும் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அந்த பேச்சு வார்த்தையின் போது அதிமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டதாகவும், அந்த பட்டியலில் உள்ள தொகுதிகளில் அதிமுக கட்டாயமாக போட்டியிடும் என்றும், போட்டியிட உள்ள தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் எடப்பாடியார் தெரிவித்தாக சொல்கிறார்கள்.




மேலும், இந்த தொகுதிளை பாஜக கேட்டால் வெற்றி பெறுவது கடினம் என்றும், குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுக செல்வாக்கு அதிகம் இருப்பதால் நாங்கள் வெற்றி பெறுவது எளிது என்று செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட தொகுதிகளை பாஜக கேட்காமல் இருந்தால் நல்லது என்று எடப்பாடி பேச்சு வார்த்தையின் போது பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அந்த பேச்சுவார்த்தையின்போதே பாஜக சார்பில் 15 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 15 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எந்த தொகுதிகள் கேட்டப்பட்டன என்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை.


அதே சமயம், பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் ஒன்று உள்ளது. எனவே ராமநாதபுரம், மதுரை, கோயம்புத்தூர், சேலம், கன்னியாகுமரி போன்ற பாஜக ஆதரவு அதிகம் உள்ள தொகுதிகளுடன், அதிமுகவுக்கு நல்ல பலம் உள்ள எளிதில் வெற்றி பெறும் தொகுதிகளையும் பாஜக கேட்டு வருவதாகவும் தெரிகின்றது.  இது அதிமுகவை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக சொல்கிறார்கள்.




இந்த பிரச்னையை அதிமுக எவ்வாறு சரி செய்யும் என்பது சவாலாக உள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலவீனமாக உள்ள தொகுதிகளை பாஜக பக்கம் தள்ளி விடவும் அதிமுக முடிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கிலும், தெற்கிலும் பாஜகவுக்கு கொடுத்து விட்டு, வலுவான மேற்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட தீர்மானிக்கலாம். அதேசமயம், தமிழ்நாடு முழுவதும் முக்கியமான தொகுதிகளை பாஜகவுக்கு தருவதில்லை என்ற எண்ணத்திலும் அதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.


இதற்கு முன்னர் பாஜக இடம் பெற்ற எந்தக் கூட்டணியிலும் அக்கட்சிக்கு 15 தொகுதிகள் கொடுக்கப்பட்டதே கிடையாது. அதிகபட்சமாக கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அதுதான் அக்கட்சி தமிழகத்தில் அதிக அளவில் போட்டியிட்ட தேர்தலாகும். அப்படி போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழிசை செளந்தர்ராஜன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற முக்கிய தலைவர்களே தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.


இந்த நிலையில் அதிமுக 2, 3 ஆக உடைந்துள்ள நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்றும் இந்த இரு கட்சிகளின் இடையே உள்ள தொகுதி பங்கீடு எவ்வாறு இருக்கும் என்று அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்