Loksabha Constituency Roundup: திருவள்ளூர் (தனி).. தொகுதியைத் தட்டித் தூக்கப் போவது யாரு?

Mar 01, 2024,07:29 PM IST

சென்னை:  தமிழ்நாட்டின் தலைத் தொகுதி திருவள்ளூர். தனித் தொகுதியான திருவள்ளூர் தமிழ்நாட்டின் வட எல்லையில் உள்ளது.


2008ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின்போது பிறந்த தொகுதிதான் திருவள்ளூர் தனி தொகுதி. தமிழ்நாட்டின் முதல் மக்களவைத் தொகுதி திருவள்ளூர்தான்.  கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய ஆறு சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி திருவள்ளூர் தனி.


ஆறு சட்டசபைத் தொகுதிகளில் பொன்னேரி தனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளார். மற்ற 5 தொகுதிகளிலும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.


திமுக - அதிமுக உதவியுடன் காங்கிரஸ் கோட்டை




தமிழ்நாட்டின் வட முனையில் உள்ள திருவள்ளூர் தொகுதியானது 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றாலும் கூட அதற்கு முன்பு 3 மக்களவைத் தேர்தல்களை இந்தத் தொகுதி திருவள்ளூர் என்ற பெயரிலேயே தேர்தல்களை சந்தித்துள்ளது. முதல் தேர்தலான 1951ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1957 மற்றும் 1962ல்  நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கோவிந்தராஜு நாயுடு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 


1962ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதி மறைந்து, ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் 2008ம் ஆண்டு தொகுதி மறு வரையின்போது மீண்டும் திருவள்ளூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதி தனது முதல் தேர்தலை இதை சந்தித்தது. அதில் அதிமுகவைச் சேர்ந்த பி.வேணுகோபால் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2014 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இங்கு காங்கிரஸ் கட்சியின் டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 1962ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது.


கூட்டணிக் கட்சிகளே போட்டி




திமுக அல்லது அதிமுக கூட்டணியில் மாறி மாறி காங்கிரஸ் இடம் பெற்று வரும் நிலையில் இந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரஸுக்கே விட்டுக் கொடுப்பது திமுக, அதிமுகவின் வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால்தான் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக இரண்டுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் உள்ள தொகுதியாகும்.


அதிக அளவில் பட்டியல் இன மக்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். வன்னியர்கள், முதலியார்கள், நாயுடு சமூகத்தவர்கள் அடுத்து அதிக அளவில் உள்ள சமூகத்தினர் ஆவர். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருவள்ளூர் தனி தொகுதி அதிக அளவிலான தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில் நகரமாகும். தொழில் நகரகளுக்கு இணையாக இங்கு விவசாயமும் சிறப்பாக உள்ளது. சென்னையின் தலைப் பகுதியாக உள்ள திருவள்ளூரிலிருந்துதான் அதிக அளவிலான குடிநீர் சென்னைக்கு வருகிறது. 


மீண்டும் வெல்லுமா காங்கிரஸ்?




காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது இத்தொகுதியின் உறுப்பினராக டாக்டர் ஜெயக்குமார் உள்ளார். கடந்த 2019 தேர்தலில் இங்கு பதிவான வாக்குகள் விவரம்:


மொத்த வாக்குகள் - 19,46,870

பதிவான வாக்குகள் - 14,03,349

டாக்டர் ஜெயக்குமார் (காங்கிரஸ்) - 7,67,292

டாக்டர் பி. வேணுகோபால் (அதிமுக) - 4,10,337

எம்.லோகரங்கன் (ம.நீ.ம) - 73,731

வெற்றிச்செல்வி ( நாம் தமிழர்) - 65,416


வரும் தேர்தலில் வாக்காளர்கள் விவரம்:


மொத்த வாக்காளர்கள்: 20,58,098

ஆண்கள்: 10,10,968

பெண்கள்: 10,46,755

மூன்றாம் பாலினத்தவர்: 375


தொழில்நகரமாக இருந்தபோதும் கூட, சென்னைக்கு மிக மிக அருகே இருந்தும் கூட அதிக அளவில் குறைகளுடன் கூடிய தொகுதியாகவே திருவள்ளூர் இன்னும் இருக்கிறது. வருகிற தேர்தலிலும் இத்தொகுதியில் காங்கிரஸே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு  உள்ளது. மக்கள் இந்த முறையும் காங்கிரஸுக்கே ஓட்டுப் போடுவார்களா அல்லது திருப்பத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்