Loksabha Constituency Roundup: பட்டையைக் கிளப்பப் போகும் தேனி.. அனல் பறக்கும் போட்டிக் களம்

Mar 21, 2024,10:37 PM IST

சென்னை: தேனியில் இந்த முறை அனல் பறக்கும் போட்டிக் காத்திருக்கிறது. அதிமுக - திமுக - பாஜக என மும்முனைப் போட்டி மூண்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 33வது தொகுதியாக சேர்க்கப்பட்டது தேனி லோக்சபா தொகுதி. சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளிடக்கியது தான் தேனி லோக்சபா தொகுதி. விவசாயம், ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றை தனிச்சிறப்பாக கொண்ட தொகுதி. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தொகுதி. இதற்கு அடுத்த படியாக சிறுபான்மையினர், ஆதி திராவிடர், கள்ளர், நாயக்கர், நாடார், கவுண்டர் சமூகத்தினரும் பரவலாக வாழும் தொகுதி தேனி.


கிராமங்களை அதிகம் கொண்ட இந்த தொகுதியில் முல்லை பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளன.  விவசாயம், சிறு தொழில்கள் இந்த தொகுதியின் முக்கிய தொழிலாக உள்ளது. வைகை அணை, சுருளி அருவி, கும்பக்கரை அருவி உள்ளிட்டவைகள் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா தலங்களாக உள்ளன. 


தேனி தொகுதி வாக்காளர் விபரம் :




மொத்த வாக்காளர்கள் - 16,12,503

ஆண் வாக்காளர்கள் - 7,92,195

பெண் வாக்காளர்கள் - 8,20,091

மூன்றாம் பாலினத்தவர் - 217


அதிமுக.,வின் கோட்டை :


தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை இது அதிமுக.,வின் கோட்டை என்றே சொல்லலாம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி. ஆரம்பத்தில் காங்கிரசின் வசம் இருந்த இந்த தொகுதி, 1989 ம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதால் விஐபி தொகுதி ஆனது. அதோடு இந்த தொகுதியில் அதிமுக.,வின் செல்வாக்கும் அதிகரிக்க துவங்கியது. 


பிறகு 2002, 2006 என அடுத்தடுத்த தேர்தல்களில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இது அதிமுக.,வின் அசைக்க முடியாதை கோட்டையாக மாறியது. பசுமையான தொகுதியான தேனி லோக்சபா தொகுதி தற்போதும் அதிமுக வசமே உள்ளது. தற்போது அதிமுக வசம் உள்ள ஒரே லோக்சபா தொகுதி தேனி மட்டும் தான்.


3 முதல்வர்கள் போட்டியிட்ட சட்டசபைத் தொகுதி :


அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, டிடிவி தினகரன் ஆகியோர் எம்.பி.,யாக இருந்த தொகுதி இது. எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகிய மூன்று முதல்வர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டசபை தொகுதிகளை கொண்டது என்ற பெருமையும் தேனி லோக்சபா தொகுதிக்கு உண்டு. 


2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.,யானார்.  இந்த தொகுதியில் அதிமுக.,விற்கு என்று வலுவான ஓட்டு வங்கி உள்ளது. 


2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் :


கடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் 33 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அதிமுக.,வின் ரவீந்திரநாத் 4,99,354 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 76,319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தற்போதும் நடைபெற்று வருகிறது. 


தேனி தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் :


ஏராளமான அணைகள், நீர்தேக்கங்கள் இருந்தாலும் பல மாதங்களாக ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இந்த தொகுதியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. அணைகள் தூர்வாரப்படாதது, சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படாதது, வேலையில்லாமல் மக்கள் பலர் வேறு ஊர்களுக்க இடம் பெயர்வது உள்ளிட்டவைகள் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. 


நியூட்ரினோ திட்டத்தை தடுப்பது, முல்லை பெரியாறு மற்றும் வைகை அணிகளில் கழிவுநீர் கலக்காமல் பாதுகாப்பது, திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றுவது, திராட்சை, மாம்பழங்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகள் அமைப்பது உள்ளிட்டவைகள் இத்தொகுதி மக்கள் நீண்ட காலமாக முன் வைக்கும் கோரிக்கைகள் ஆகும்.


அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் :


கடந்த தேர்தலின் போது பல சாலை திட்டங்கள், தேனியில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி அமைப்பது, அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது, விவசாயிகளுக்கு குளிர்சாதன பாதுகாப்பு கிடங்குகள் அமைத்து தரப்படும், மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது, ஆண்டிப்பட்டி மலர் விவசாயிகளுக்காக சென்ட் தொழிற்சாலை அமைப்பது உள்ளிட்ட பல வாக்குகள் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டது. ஆனால் இவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. 


தொகுதி பக்கமும் ரவீந்திராத் வருவது கிடையாது கிடையாது, இது பற்றி கேட்பதற்கு செய்தியாளர்கள் முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தான் இந்த தொகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 


2024 லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் :


நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி சார்பில் தங்கதமிழ்ச் செல்வனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் தேனி லோக்சபா தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, வேட்பாளராக யார் நிறுத்தப்பட போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் அமமுக தலைவர் டிடிவி தினகரன் இங்கு போட்டியிடலாம் என்று தெரிகிறது. 


தேனி இந்த முறை யாருக்கு தித்திப்பைத் தரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்