Loksabha Constituency Roundup: குமரி கோட்டையைத் தக்க வைக்குமா காங்கிரஸ்.. மும்முனைப் போட்டி!

Mar 22, 2024,08:26 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் கடைக் கோடி தொகுதியான கன்னியாகுமரி, தமிழ்நாட்டின் பிற தொகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. தேசியக் கட்சிகளுக்கு முன்னுரிமை தரும் ஒரே தமிழ்நாட்டுத் தொகுதி இது மட்டுமே.


தமிழகத்தில் 39 வது லோக்சபா தொகுதி கன்னியாக்குமரி தொகுதி. கன்னியாக்குமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது தான் கன்னியாக்குமரி தொகுதி. கன்னியாகுமரியை பொறுத்த வரை காங்கிரஸ், பாஜக, திமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் செல்வாக்கு அதிகம். 


திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடல் சங்கமம், திற்பரப்பு அருவி, பழமையான கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடக்கியதாகவும், அதிக சுற்றுலா தலங்களைக் கொண்ட தொகுதியாகவும் கன்னியாக்குமரி தொகுதி உள்ளது. ரப்பர் உற்பத்தி, விவசாயம், மீன்பிடி ஆகியவை இந்த தொகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன. 


கன்னியாகுமரி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,50,776. இதில் ஆண் வாக்காளர்கள் 7,71,824, பெண் வாக்காளர்கள் 7,74,615. மூன்றாம் பாலின வேட்பாளர்கள் 142 பேர். இந்த தொகுதியில் மொத்தம் 1694 வாக்கு சாவடிகள் உள்ளன. 




காங்கிரஸ் கோட்டை


இந்த தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியை காங்கிரசின் கோட்டை என்றே சொல்லலாம். 2014ம் ஆண்டு நடைபெற்றற லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே மிக கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஹெச்.வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3,67,302 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார்.  


2020ம் ஆண்டு வசந்தகுமார் திடீரென மரணமடைந்ததால், அதற்கு பிறகு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், மறைந்த வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதில் 1,37,950 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். 


சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டது, கேரளாவில் இருந்து கன்னியாகுமரியை இணைக்கும் நான்கு வழிச்சாலை, நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு, விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் பணிகள் ஆகியவற்றை விஜய் வசந்த் நிறைவேற்றி உள்ளார். இவரது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட கன்னியாக்குமரி மீன்வள கல்லூரி அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 


நிறைகளும்... குறைகளும்


அதே சமயம் நலிவடைந்து வரும் ரப்பர் தொழிலை சரிசெய்ய ரப்பர் பூங்கா அமைக்காதது, நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காதது, அரசு விவசாய கல்லூரி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேன்சர் சென்டர் அமைப்பது, ஐடி நிறுவனம், மீனவர்களுக்கு பேரிடர் கால உதவ ஹெலிகாப்டர் தளங்கள் அமைப்பது, சுற்றுலா தலங்களை மேம்படுத்த தனி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வாக்குறுதி அளித்த படி நிறைவேற்றாமல் விட்டது தொகுதி மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தற்போது கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் பொன் ராதாகிருஷ்ணன். திமுக கூட்டணி சார்பில் மீண்டும் விஜய் வசந்த்தே போட்டியிடுவார் என்று தெரிகிறது.  அதிமுகவும் தன் பங்குக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பசிலியான் நஸ்ரேத் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்முனைப் போட்டி நிலவினாலும் கூட நேரடிப் போட்டி என்னவோ காங்கிரஸ் - பாஜக இடையேதான். காங்கிரஸின் கரம் ஓங்குமா அல்லது தாமரை மலருமா.. குமரியின் கடைக்கண் பார்வை யாருக்கு கிடைக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்