டில்லி : லோக்சபா தேர்தல் 2024 ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்துள்ளார். மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவலின்படி, லோக்சபா தேர்தலில் 97 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பேர் பெண் வாக்காளர்கள் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 44 நாட்கள் மட்டுமே உள்ளதால் நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்த சிறிது நேரத்திலேயே பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தங்களுடைய ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, நல்லாட்சியை நோக்கமாகக் கொண்டு சாதனைப் பாதையில் தொடர்ந்து செயல்படும் என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டார். அதே போல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், ஜனநாயகத்தையும், நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தையும் சர்வாதிகார ஆட்சியிடம் இருந்து காப்பாற்ற கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு என கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஆளும் கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி கையில் எடுக்க போகும் முக்கியமான விஷயங்கள், தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க போவது, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க போகும் 10 விஷயங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. ராமர் கோவில் :
அயோத்தி ராமர் கோவில் அரசியல் என்பது மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே நடந்து வருகிறது. தற்போது இந்த ஆண்டு ஜனவரியில் கோவிலையும் கட்டி கும்பாபிஷேகம் செய்து விட்டார்கள். இது பாஜக.,வின் இந்துத்துவா கொள்கைக்கு பலம் சேர்க்கும் மிக முக்கியமான விஷயமாகும். அடுத்து சிஏஏவும் அமல்படுத்தப்படவுள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஆகியவற்றை தங்களது துணிச்சலான முடிவாகவும், பலமாகவும் பாஜக நினைக்கிறது. ஆனால் இதையே மோடியின் தனிப்பட்ட பெருமைக்காக செய்யப்பட்டது என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யலாம்.
2. கூட்டணிகள் :
2004 ல் திமுக மற்றும் பாஸ்வான் கூட்டணியில் இருந்து விலகியதால் வாஜ்பாய் நிலை என்ன ஆனது என்பது மோடிக்கு நன்றாக தெரியும். அதிலிருந்து பாடம் கற்றதால் 2024 ல் பாஜக.,விற்கு எதிராக தேசிய அளவில் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கிய போதிலும், தங்களின் ராஜ்தந்திர செயல்பாடுகளால் பல கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வைத்து விட்டது பாஜக. நிதிஷ்குமார், சந்திர பாபு ஆகியோர் பாஜக கூட்டணியில் சேர்ந்தது. சிவசேனா, தேசியவாத காஐகிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்து, அதில் ஒரு பாதி பாஜக.,வுடன் சேர்ந்தது, அதே போல் உ.பி., டில்லி, தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் எதிர்பார்க்கும் அளவிற்கு, வாக்குகளை சிதறடிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
3. ஜிடிபி வளர்ச்சி :
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி தான் இந்த தேர்தலில் வாக்காளர்களை முடிவெடுக்க வைக்கும் என பொருளாதார நிபுணர்கள் எப்போதும் தெரிவித்து வருகின்றனர். பொருளாதாரத்தை அரசு கையாளும் விதம் தான் வாக்காளர்களின் முடிவை தீர்மானிக்கும் என பொருளாதார நிபுணர்களே கூறி வருகின்றனர். நடுத்தர மக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, சந்தையில் அதிக முதலீடுகள் செய்ய வைப்பதை பாஜக முக்கிய விஷயமாக பிரச்சாரத்தின் போது எடுத்து பேச வாய்ப்புள்ளது.
4. பணவீக்கம் :
பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை உயராமல் வைத்திருந்தது, சமீபத்தில் பெட்ரோல்-டீசல் விலை, எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது, உணவு பொருள் ஏற்றுமதியை குறைத்தது உள்ளிட்டவைகள் பாஜக.,வின் பலமாக சொல்லப்படுகிறது. ஆனால் உணவு பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க வாய்ப்புள்ளது.
5. சிஏஏ :
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் சிஏஏ பல மாதங்களாக முக்கியமான அரசியல் விவகாரமாக மாறி உள்ளது சிஏஏ. இது தேர்தலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிஏஏ அமல்படுத்தப்பட்டால் அது தலித் இன மக்களுக்கு அதிக பலன் தருவதாக அமையும். ஆனால் இந்துத்துவா அடையாளம், காவி சாயம் பூசப்பட்டுள்ள பாஜக அதை எப்படி பயன்படுத்த போகிறது என்ற தான் தெரியவில்லை. இதை வைத்து எதிர்க்கட்சிகள் நிச்சயம் அரசியல் செய்ய வாய்ப்புள்ளது. இது அடித்தட்டு மக்களுக்கு பலன் தரும் திட்டம் என்பதால் இதுவும் எதிர்க்கட்சிகள் பிரசாய யுக்தியாக எடுப்பது கொஞ்சம் கடினமான காரியம் தான்.
6. உலக தரம் உயர்வு :
உலக அரங்கில் இந்தியா, சமீப காலங்களில் அடைந்துள்ள வளர்ச்சியை யாரும் மறுக்க முடியாது. மற்ற நாடுகள் ஆச்சரியப்படும் வகையில் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இதை வெளிநாடுகள் பலவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதை முக்கிய விஷயமாக கண்டிப்பாக மோடி பிரச்சாரத்தில் முன் வைப்பார். இதனை எதிர்க்கட்சிகள் சமாளித்து, வாக்காளர்கள் மனதை கவருவதில் தான் அவர்களின் திறமை இருக்கிறது.
7. வேலையின்மை :
எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க போகும் முக்கிய விஷயம் வேலையில்லா பிரச்சனை தான். பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்றால் ஏன் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது? என்பதை எதிர்க்கட்சிகள் முக்கிய விஷயமாக கையில் எடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் வேலையில்லாதவர்கள் பலர் சுயதொழில் புரிபவர்களாக மாறி உள்ளதும் என்பது பாஜக.,விற்கு சாதகமான விஷயம் தான். ஆனால் குறைந்த அரசு வேலைகளுக்கு பலரும் போட்டியிடுவது, திறன் வளர்ச்சி குறைந்தது ஆகியவை எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாக இடம்பெறும்.
8. சமூக நலன் :
சமூக நலன் என்பதை தேர்தல் முக்கிய அம்சமாக முன் வைத்து எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் எல்லாம் மோடி தான் முன்னிலை வகிக்கிறார். சாதி, மதங்களை தாண்டி பலரும் இதில் மோடிக்கு தான் தங்களின் ஆதரவை வழங்குகிறார்கள். பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது தான் மக்களின் கருத்தாக தெரிவிக்கிறார்கள். இதனால் இந்த முறையில் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் என்னவெல்லாம் செய்வோம் என்பதில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பல வாக்குறுதிகளை அள்ளி வீசலாம்.
9. நிலையான ஆட்சி :
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் ஜனதா கட்சியால் அந்த ஆட்சியிலேயே பாதியில் கலைக்கப்பட்டது. மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியை பிடித்து, அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். அதற்கு பிறகு மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் நிலையில்லாத ஆட்சியே நடந்தது. ஆனால் 2014 துவங்கி 2024 வரை மோடி ஒரு நிலையான, அதே சமயம் வலிமையான ஆட்சியை கொடுத்துள்ளார் என்பது பாஜகவின் வாதம். இதனால் வாக்காளர்களும் நிலையான, உறுதியான அரசை தான் எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக நம்புகிறது. எந்த நேரத்தில் ஆட்சி கவிழுமோ, ஆளும் கட்சியின் பலம் போய் விடுமோ என்ற பயம் பாஜக ஆட்சி காலத்தில் ஏற்படவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆடட்சி அமைத்தால் அப்படி ஒரு நிலையான ஆட்சியை 5 ஆண்டுகளுக்கு கொடுக்க முடியுமா என்பது தான் வாக்காளர்கள் முன் வைக்கும் கேள்வி.
10. அமலாக்கத்துறை - சிபிஐ - தேர்தல் பாண்டுகள்
வேறு எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத அளவிற்கு அமலாக்கத்துறை, சிபிஐ.,யின் விசாரணை பாஜக ஆட்சியில் தான் அதிகம் நடந்ததுள்ளது. இதற்கு பாஜக தரும் விளக்கம், எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள் என்பது தான். ஆனால் எதிர்க்கட்சிகள் சொல்வது, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வைத்து பாஜக எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது என்பது தான். அப்படியே மிரட்டுவதாக இருந்தால், ரெய்டில் லட்ச கணக்கில் பணம் சிக்குவது எப்படி? என பாஜக பதில் கேள்வி கேட்கிறது. ஆனால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட அமலாக்க துறை ரெய்டு, பல விஐபி.,க்களின் கைது, பதவி பறிப்பு போன்றவை மிக முக்கிய அம்சமாக இடம்பெறும். தற்போது அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் தேர்தல் பாண்டுகள் விவகாரம் வந்து சேர்ந்துள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமான அம்சங்கள் என்று பார்த்தால் குறைவுதான்.. பாசகமான விஷயங்களே அதிகம் இருக்கிறது. ஆனால் அதை பலமான முறையில் எழுப்பி, மக்களை உலுக்கி, தங்களுக்கான வாக்குகளாக மாற்றும் சாமர்த்தியம் எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறதா என்பதை தேர்தல் முடிவில்தான் நாம் காண முடியும்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}