புதுடில்லி: இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து வெளியிடப்படும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 6ம் தேதி வெளியிட உள்ளது.இதனை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாசாரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி நடந்த காங்கிஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதில் 25 வாக்குறுதிகளுடன் 5 நீதிக் கொள்கைகள் இடம்பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவலில், நாடு மாற்றத்திற்கான அழைப்பை விடுக்கிறது. நமது தேர்தல் அறிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் வெளிப்படுத்துவது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நமது உறுதிபாட்டை எடுத்துச் சொல்வது ஆகியவற்றை உறுதி செய்வது தான் நம் அனைவரின் கடமை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ராஜஸ்தானில் வைத்து வெளியிடுகிறது. அதில், கட்சியின் 5 நீதிக் கொள்கையின் கீழ் 25 வாக்குறுதிகள் மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கான உறுதிமொழிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும், மூத்த உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}