சென்னை: யோகி பாபு மற்றும் மாஸ்டர் தினேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லோக்கல் சரக்கு திரைப்படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
என்னதிது.. பேரு ஒரு மார்க்கமா இருக்கேன்னுதான நீங்க நினைக்கறீங்க.. மைன்ட் வாய்ஸ் கேட்டுருச்சு பாஸ்.. பேருதான் இப்படியாம்.. பட், குடும்பத்தோட பார்க்கக் கூடிய படம்தானாம்.
தமிழ் திரை உலகில் காமெடிக்கு என்றே ட்ரெண்டிங்கில் இருப்பவர் யோகி பாபு. இவர் நடிக்கும் படத்தில் காமெடிகளை சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு இவர் படத்தில் வரும் காமெடிகள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்கும். சூப்பரான நகைச்சுவை உணர்வுடன் ஒரு சில படங்களில் கதை நாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது லோக்கல் சரக்கு என்ற படத்தில் காமெடி கதை நாயகராக நடித்துள்ளார் யோகிபாபு. இப்படத்தை இயக்குனர் எஸ்.பி ராஜ்குமார் இயக்கி உள்ளார். இவர் அழகர் மலை, சுறா, பட்டைய கிளப்புவோம் பாண்டியா, உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் இயக்கும் படத்தில் காமெடி காட்சிகளை உருவாக்குவதில் தலைசிறந்தவர். "அந்தப் பக்கம் போகாத.. அங்க ரெண்டு அக்கா தங்கச்சிங்க சண்டை போட்டிட்டிருக்காங்க" காமெடியை மறக்க முடியுமா.. வடிவேலு படத்தில் வந்த செமையான காமெடி அது.. அதுக்கு காரணம் இந்த ராஜ்குமார்தான்!
லோக்கல் சரக்கு திரைப்படத்திலும் மது பழக்கத்தை வைத்து காமெடி காட்சிகளை உருவாக்கி இருக்கிறாராம் ராஜ்குமார். இப்படத்தில் வரும் காமெடிகள் வயிறு வலிக்க வலிக்க சிரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கும் விதத்திலும் உருவாகியுள்ளதாம்.
இப்படத்தை வராஹ ஸ்வாமி பிலிம் சார்பில் கே. வினோத்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். வி.ஆர் சுவாமிநாதன் இசையமைத்துள்ளார்.இவரின் இசையில் ஒரு குத்துப் பாடல் மற்றும் மெலடி பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல் ஆக வந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ட்ரெண்ட் செட் பாடலாகவும் அமைந்துள்ளது.
இப்படத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் நாயகனாகவும், உபாசனா ஆர்.சி நாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, சாம்ஸ் ரெமோ சிவா, சிங்கம்புலி, வையாபுரி, சென்ராயன், வினோதினி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கியுள்ளதாம். மேலும் ஒரு நடுத்தர குடும்பத்தில், குடும்பத் தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால் அந்த குடும்பம் எவ்வாறு பிரச்சனைகளை சந்திக்கிறது.. அந்த குடும்பத்தின் நிலைமை எவ்வழியில் செல்லும்.. என்பதை அழுத்தமாகவும் நகைச்சுவை கலந்தும் படமாக்கப்பட்டுள்ளதாம். காமெடி கலந்து படமாக்கப்பட்டு இருந்தாலும், படத்தின் கிளைமாக்ஸில் பெண்கள் சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை எதார்த்தமாகவும் கமர்சியலாகவும் லோக்கல் சரக்கு திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்களாம்.
லோக்கல் சரக்கு திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் தற்போது குறைந்து வரும் நிலையில், குடும்பங்கள் கொண்டாடும் வகையில் நல்ல மெசேஜ் சொல்லும் நகைச்சுவை கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளதாம் லோக்கல் சரக்கு திரைப்படம். நகைச்சுவை படமாக மட்டும் இல்லாமல், நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருப்பதால் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
படம் வரட்டும், பார்த்துட்டு நாமளும் கருத்து சொல்வோம்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
{{comments.comment}}