அயோத்தி: அயோத்தியில் பலரது வாழ்க்கை டோட்டலாக மாறியிருக்கிறதாம்.. சில மாதங்களுக்கு முன்பு வரை முறையான வேலை இல்லாமல், பிழைப்பு தேடி வேற ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்த தீபக் பாண்டே என்பவர், இப்போது அயோத்தியிலேயே வீடு கட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாராம். எல்லாத்துக்கும் காரணம் சாட்சாத் நம்ம ராமர் கோவில்தான்!
அயோத்தி ராமர் கோவில் வந்ததிலிருந்து அந்த நகரமே முழுவதுமாக மாறிப்போச்சு. அந்த ஊர் மக்களின் வாழ்க்கையே டோட்டலா மாறிடுச்சு. குறிப்பாக சிறு தொழில் செய்து வருவோர், கடைக்காரர்கள், சாலையோர வியாபாரம் என பல தொழில்கள் உயிர் பெற்றுள்ளன. இந்த கோவில் திறப்பு விழாவுக்கு முன்னாடி வரைக்கும் அங்க பலருக்கும் வேலை வாய்ப்பு என்பதே கிடையாது. ரொம்ப வறுமை, ஏழ்மை இது போன்ற நிலைமை தான் இருந்து வந்தது. தற்போது இந்த நிலைமை மாறி உள்ளது.
அயோத்தி நகரில் ராமர் கோவில் வந்ததிலிருந்து தினசரி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குவிகிறார்களாம். பலருக்கும் தொழில்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது. பல தொழில்கள் லாபகரமாக இயங்க ஆரம்பித்துள்ளனவாம். குறிப்பாக சாலை ஓரம் உள்ள சிறு, குறு தொழில்களில் நல்ல வியாபாரம் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரித்து பணம் கொட்ட ஆரம்பித்து விட்டது.
ராமர் கோவில் பகுதியில் உள்ள தெருவில் 48 வயதான பிரமேஷ் பாண்டே வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் மூன்று அறைகள் கொண்ட வீடு ஒன்றை கட்டியுள்ளார். தற்போது அந்த வீட்டை அவர் பக்தர்களுக்கு வாடகைக்கு விட்டு செம காசு பார்த்து வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், "கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததில் இருந்து தினசரி ராமர் கோவில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு ஒரு அறைக்கு தலா 3000 வீதம் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறேன். சாமி தரிசனத்திற்காக வரும் பார்வையாளர்களை பொறுத்து ஒரு நாளைக்கு ரூபாய் 1400 முதல் ரூபாய் 3000 வரை வாடகைக்கு விடுகிறேன்" என பாண்டே கூறியுள்ளார். பாண்டே வாழ்க்கையில் சூப்பரான வருமானத்தைக் காட்டியுள்ளார் ராமர்!
ராமர் கோவிலுக்கு அடுத்த தெருவை சேர்ந்த ஜஸ்வந்தி ஷர்மா என்பவர் ராமர் குறித்த பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் இப்போது கூட்டம் அலை மோதுவதால் வியாபாராம் சூடு பிடித்துள்ளதாம். வருமானம் அதிகரித்துள்ளதாம்.
அப்பகுதியில் சாப்பாடு கடையை நடத்தி வரும் பிரபாத் குப்தா என்பவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார். பக்தர்களுக்கு தோசை தயாரித்துக் கொடுக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். சாப்பாடு தட்டை பக்தர்களுக்கு வழங்கும் போதும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுகிறார். நான் தளம் கட்டுவதற்கான அடித்தளம் போட்டுள்ளேன். ராமர் மனது வைத்தால் வாடிக்கையாளர்களை அதிகம் பெற முடியும் என்று அவர் உற்சாகமாக கூறுகிறார்.
வியாபாரிகள் மட்டுமல்லாமல், உள்ளூர் சுற்றுலா ஏஜென்சி நிறுவனங்களுக்கும் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளதாம். சுற்றுலா ஏஜென்சி நடத்தி வரும் உமேஷ் சிங் என்பவர் கூறுகையில், கடவுள் அருளால் கடந்த ஒரு மாதமாக முன்பதிவுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடரும் என நம்புகிறேன் என கூறினார்.
அயோத்தியில் ஜனவரி இரண்டாம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இதில் பல்வேறு தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரை நட்சத்திரங்கள், யோகிகள், மடாதிபதிகள், என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தற்போது அயோத்திக்கு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இது மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அயோத்தியில் ரயில் நிலையம் நவீனமாக்கப்பட்டுள்ளது. புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்தும் பலர் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் அயோத்தி செம பிசியான நகரமாக மாறியுள்ளது. பக்தி நகரமாக இருந்து இப்போது அது சிறந்த பிசினஸ் நகரமாக மாற ஆரம்பித்துள்ளது.
ரமேஷ் பாண்டே போல, அயோத்தியில் வீடு வைத்துள்ள பலரும் தங்களது வீடுகளை பக்தர்களுக்கு வாடகை விடுவதற்கு ஆரம்பித்துள்ளனர். பலர் வீடுகளைப் புதுப்பித்து அதை வாடகைக்கு விடுவதற்கு ஏற்றார் போல மாற்ற ஆரம்பித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் பல கடை உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள கட்டடங்களுக்கு மேல் புதிய கட்டடங்களை எழுப்பி வருகின்றனர். ராமர் கோவில் பாதையில் உணவகங்கள், பூஜை சாமான்கள் விற்கும் கடைகள், மட்டுமல்லாமல் டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், துணிக் கடைகள், செல்போன் கடைகள், பரிசு பொருட்கள் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் வரத் தொடங்கியுள்ளன.
அயோத்தி செல்லும் வழியில் பைசாபாத் நகரத்தில் இருந்து பெரிய கட்டிடங்கள், விருந்தினர் மாளிகைகள், கார் பார்க்கிங் உள்ளிட்ட உணவகங்கள், முதலியவை கட்டப்பட்டு வருகின்றன. தீபக் பாண்டே, பிரமோத் பாண்டே, ஜஸ்வந்தி ஷர்மா, பிரபாத் குப்தாவைப் போல பலரது வாழ்க்கையும் ராமர் புண்ணியத்தால் ஜொலிக்க ஆரம்பித்துள்ளனவாம்.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}