லிவ் இன் பார்ட்னரின்.. 14 வயது மகளை சீரழித்த இளைஞர்.. டெல்லியில் ஷாக்.. அதிரடி கைது!

Jan 18, 2024,06:19 PM IST

டெல்லி: டெல்லியில், லிவ் இன் பார்ட்னரின் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மீது பலாத்காரம் உள்ளிட்ட2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்துள்ளது.


அந்த நபரின் பெயர் அங்கித் யாதவ். பஸ் டிரைவர். 29 வயதான இவர் காஸியாபாத்தைச் சேர்ந்தவர்.  ஒரு பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார். அந்தப் பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர். எட்டு வருடத்திற்கு முன்பே இருவரும் பிரிந்து விட்டனர். அப்பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.




தனது குழந்தைகளுடன், அங்கித் யாதவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தார் அப்பெண். இந்த நிலையில்தான் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், அப்பெண்ணின் 14 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் அங்கித் யாதவ்.


ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது  சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குப் போயிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பலாத்காரம் செய்துள்ளார்  அங்கித் யாதவ். இதை வெளியில் சொல்லக் கூடாது என்று கூறி மிரட்டி மேலும் சில முறையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.


ஆனால் அந்த சிறுமி பின்னர் தனது தாயாரிடம் நடந்ததைச் சொல்ல அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக செயல்பட்டு அங்கித் யாதவைக் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்