அபுஜா, நைஜீரியா: நைஜீரியாவின் ஓசுன் மாகாணத்தில் உள்ள ஓபாபெமி அவலோவா பல்கலைக்கழக விலங்கியல் பூங்காவில் தன்னை வளர்த்து வந்த விலங்கியல் பூங்கா காப்பாளரை ஒரு சிங்கம் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து வருடமாக இந்த காப்பாளர் அங்கு பணியாற்றி வந்தார். அங்குள்ள சிங்கங்களை இவர்தான் பத்திரமாக பார்த்துக் கொள்வார். அந்த சிங்கங்களுக்கு சாப்பாடு போடுவது, குளிக்க வைப்பது என பராமரித்து வந்தார். கொல்லப்பட்டவரின் பெயர் ஒலபோடே ஒலவுயி. அவர் சிங்கங்களுக்கு வழக்கம் போல சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிங்கம் அவரைத் தாக்கியது.
படு வேகமாக அவரை கடித்து குதறிய சிங்கத்தைப் பார்த்து சக காப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். உடனடியாக ஒலபோடேவைக் காப்பாற்ற அவர்கள் முயன்றனர். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. கடுமையாக கடித்துக் குதறப்பட்ட ஒலபோடே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
ஒலபோடேவை கடித்துக் கொன்ற சிங்கத்தை தனியாகப் பிரித்து தற்போது வேறு ஒரு கூண்டில் அடைத்துள்ளனர். இந்த சிங்கம் பிறந்தது முதல் அதை பராமரித்து வந்துள்ளார் ஒலபோடே என்று காப்பாளர்கள் கூறியுள்ளனர். ஒலபோடேவைக் கொன்றது ஆண் சிங்கமாகும். ஏன் அது தாக்கியது என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகமே பெரும் சோகமாகியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அடபோயா சிமியோன் பாமிரே இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். விரிவான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட ஒலபோடேவுக்கு மாணவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொல்லப்பட்ட காப்பாளர் மிகவும் இனிமையானவர், ரொம்ப நல்ல மனிதர், ஜாலியாக பேசக் கூடியவர். அவர் தனது பிள்ளைகள் போல சிங்கங்களைப் பார்த்துக் கொள்வார் என்று அவர்கள் சோகத்துடன் கூறினர்.
வடக்கு நைஜீரியாவில் உள்ள கானோ பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் கடந்த 50 வருடமா சிங்கங்களுக்கு உணவூட்டி வரும் அப்பா கண்டு என்பவர் கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதனால் மற்ற காப்பாளர்கள் பயப்படக் கூடாது. தொடர்ந்து சிங்கங்களைப் பராமரிக்க வேண்டும். நான் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். இது எனது கடமை என்றார் அவர்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}