அருமை தங்கச்சிகளே.. ஆருயிர் அக்காக்களே.. இதைச் செஞ்சு பாருங்கம்மா!

Aug 08, 2023,04:14 PM IST
- மீனா

அடடடடடாடா.. இந்த சமையல முடிச்சிட்டு கிச்சனை விட்டு வெளியில வர்றது இருக்கே.. செவ்வாய் கிரகத்துக்கு பொடி நடையா நடந்து போய்ட்டு திரும்பி வர்ற மாதிரி அவ்வளவு டென்ஷனா இருக்குக்காக!

என்னம்மா "90ஸ் கிட்ஸ்".. கொஞ்சம் எக்ஸ்ட்ரா புலம்பலா இருக்கே இன்னிக்கு.. 

பின்ன என்னக்கா.. கிச்சனுக்குள்ள போய்ட்டு நாம படுற பாடு இருக்கே.. நீங்கெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ..!



கவலைப்படாதம்மா சமையலை சட்டென்று முடிக்க, டென்ஷன் இல்லாமல் வேலைகளை முடிக்க ஒரு ரகசியம் இருக்கு.. சொல்லட்டா?

அத சொல்லுங்கக்கா முதல்ல.. !

அவங்களுக்கு மட்டுமில்லீங்க.. எல்லா சிஸ்டர்களுக்கும் இது தேவையானதுதான்.. சமையல் செய்வதற்கு முன்பு சில முன்னேற்பாடுகளை செய்தாலே போதும். அப்படி நீங்கள் செய்யும்போது உங்கள் அன்றாட வேலைகளையும் அசால்ட்டாக நீங்க செய்து முடித்து உங்களுக்காகவும் உங்கள் நேரத்தை செலவிட முடியும். அதுவும் வேலைக்கு போற பெண்களுக்கு இந்த யுக்திகள் மிகவும் நன்றாக கை கொடுக்கும். 

"எதையும் பிளான் பண்ணிச் செய்யணும்..".. இது வடிவேல் வார்த்தையை வேத வாக்கியமாக எடுத்துக்கிட்டாலே பாதி சமையலை ஈசியா முடிச்சிரலாம்.. சமையல் செய்வதற்கு முன்பு ஒரு "மாஸ்டர் பிளான்" போட்டுக் கொள்ள வேண்டும். என்னம்மா இது.. சமையல் மாஸ்டர் கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன சமையலுக்கு மாஸ்டர் பிளான் அப்படின்னுதானே நினைக்கறீங்க.. உங்க மைண்ட் வாய்ஸ நாங்க கேட்ச் பண்ணிட்டோம். கண்டிப்பா போட்டே தீரணும் சிஸ்டர்ஸ்!



மாஸ்டர் பிளான்னதும்  ஏதோ பேங்க்கை கொள்ளையடிக்கப் போவது போல பெருசால்லாம் போடத் தேவையில்லை..  சின்னதா போட்டா போதும்.  "நாளைக்கு என்ன சமைக்க போறீங்க, அதுக்கு என்னவெல்லாம் தேவைப்படும், அதை எப்படி எல்லாம் முன்னாடியே  செய்து வைத்துக் கொள்ளலாம்".. இதுதான் அந்த மாஸ்டர் பிளான்.  அதைப்பற்றி தான் பார்க்க போறோம். அதற்கான டிப்ஸ் இதோ. 

சின்ன வெங்காயம், பூண்டு: நாம் செய்யும் ஒவ்வொரு சமையலுக்குமே, வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டையும் உபயோகப்படுத்துவோம். அதை சமைக்கும் போது அதனுடைய தோலை  நீக்கி சமையல் செய்யும் நேரத்தை அதிகப்படுத்தாமல், முன்னதாகவே நமக்கு தேவையானதை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பிறகு தோலை நீக்கும் போது நமக்கு மிகவும் சுலபமாக வந்துவிடும். அந்தத் தண்ணீரையும் வேஸ்ட் செய்யாமல் வீட்டில் உள்ள  செடிகளுக்கு ஊற்றி விடலாம். வெங்காயம் பூண்டு இவை இரண்டையும் ஏர் டைட்டான பாக்ஸில் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்:  பெரிய சைஸ் இஞ்சியை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டால், புளியோதரை, லெமன் மற்றும் டீ போடுவதற்கும் இந்த இஞ்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு பேஸ்ட் அரைப்பதற்கு இஞ்சி உடன் பூண்டையும் சேர்த்து சிறிது கல் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் முழுவதும் அப்படியே பார்ப்பதற்கு பிரஷ் ஆகவே இருக்கும்.



தேங்காய் துருவல்: குழம்பு ,கூட்டு ,பொரியல், அவியல் இதை எல்லாவற்றையும் செய்வதற்கு தேங்காய் ஒரு முக்கியமான பொருள். தேங்காய் உடைத்து துருவி அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு ஜிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.  ஃப்ரீசரில் இருந்து எடுக்கும் போது  கெட்டியாக இருக்குமே என்று கவலைப்பட தேவையில்லை. அரைக்கும் போது சிறிது சுடுநீர் ஊற்றி அரைத்தால் நார்மலான தேங்காய் விழுதை போல் ஆகிவிடும்.

புளி பேஸ்ட்: எல்லா வகை குழம்புக்கும் சிறிதளவாவது நாம் புளியை பயன்படுத்துவோம். அப்படி செய்யும் போது ஊற வைக்க மறந்து விட்டோம் என்று பதற வேண்டாம். 1/2  கிலோ புளியை மொத்தமாக எடுத்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்து,  அதை ஏர் டைட் பாக்ஸில் போட்டு மூடி உள்ளே வைத்துக் கொண்டால் நமக்கு தேவைப்படும் போது அதை சிறிது எடுத்து கரைத்து ஊற்றிக் கொள்ளலாம்.

பிளான்சிங் முறை: இந்த முறையை பயன்படுத்தி ஸ்வீட் கான், பச்சை பட்டாணி, பட்டர் பீன்ஸ் ,சோயா பீன்ஸ் போன்றவற்றை பதப்படுத்தி ஃப்ரீசரில் வைத்து தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்த முடியும். அது எப்படி என்றால் முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு இவற்றை தனித்தனியாக கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஐஸ் கட்டிகளை போட்டு அதில் இந்த பயறு வகைகளை உடனே மாற்ற வேண்டும்.  பிறகு இவற்றை வடிகட்டி சிப்லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் ஸ்டோர் செய்யலாம்.

கீரை வகைகள்: கீரையில் நமக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் இதை சுத்தம் செய்து அதை சமைக்கிறதுக்குள்ள நமக்கு போது போதும் என்று ஆகிவிடும். அதனால்  முன்பே நாம் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் அது சமைப்பதற்கு மிகவும்  எளிதானதாக இருக்கும். அதற்கு ஒரு பாக்ஸில் கீழே டிஸ்யூ பேப்பரை வைத்து அதன் மேல் கீரையை வைத்து அதற்கு மேலாக ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து நன்றாக மூடி வைத்தால் எப்பொழுதும் பிரஷ்ஷாகவே இருக்கும். இந்த முறையை புதினா, மல்லி இலை, கருவேப்பிலை போன்றவர்களுக்கு நாம் பயன்படுத்தினால் நமக்கு எளிதாக இருக்கும்.



மல்லி, புதினா தொக்கு: நாம் சமைக்கும் நேரத்தை இன்னமும் குறைப்பதற்கு இந்த முறை பயன்படும். இவற்றை முதலிலே செய்து வைத்துக் கொண்டால் நொடியில் கலந்த சாதம் தயார்  செய்யலாம். புதினா அல்லது மல்லி ஒரு கைப்பிடி அளவு எடுத்து இதனுடன் ஒரு சின்ன துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு, காரத்துக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தாளிப்பதற்கு நல்லெண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த பேஸ்ட்டை இதில் போட்டு வேக விட வேண்டும். பிறகு இறக்கும் போது மேலும் கொஞ்சம் சிறிது என்னை சேர்த்துக் கொண்டால் இதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது எடுத்து சாதத்தில் கிளறினால் போதும். கலந்த சாதம் தயாராகிவிடும்.

பயறு வகைகள்: நாளைக்கு ஏதாவது ஒரு பயறு வகையில் சமைக்கலாம் என்று நினைத்திருப்பீங்க. ஆனால் அதை ஊற வைக்க மறந்தும் போயிருப்பீங்க . அதனால வேற என்ன சமைக்கலாம் என்று யோசித்து நேரத்தை வீணாக்காமல் இருக்க தான் இந்த டிப்ஸ். பயறு வகைகளை முன்னதாகவே ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி அது ஒரு ஏர் டைட் பாக்ஸில் போட்டு வைத்துக் கொண்டால் எப்போ எந்த பயிர் வைத்து சமைக்கிறது என்றாலும் அதை உடனே செய்துவிடலாம். 



அன்புச் சகோதரிகளே.. அருமை தங்கச்சிகளே.. பாசமிகு அக்காக்களே.. இதையெல்லாம் செஞ்சு பாருங்கம்மா.. அதுக்குப் பிறகு நீங்க க்விக்கா சமையைலை முடிச்சுட்டு வந்து டிவி சீரியல் பார்ப்பதையோ..ஓடிடியில் படம் பார்ப்பதையோ.. யாராலும் தடுக்கவே முடியாதும்மா..!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்