சித்த வைத்தியம் முதல் பாட்டி வைத்தியம் வரை.. தவிர்க்க முடியாத கிராம்பு.. எவ்வளவு நல்லது தெரியுமா?

May 20, 2024,12:14 PM IST

- பொன் லட்சுமி


நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவிலும் சரி மருத்துவத்திலும் சரி நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து இன்றைய காலம் வரை சமையல் கட்டில் அஞ்சரை பெட்டியில்  சமையலுக்கு தேவையான வாசனைப் பொருள்களில் முக்கிய இடம் பிடிப்பது இந்த கிராம்பு தான்.. பண்டைய காலத்தில் இது பெரும் மதிப்பு கொண்ட மசாலா பொருளாக இருந்தது சித்த வைத்தியம் முதல் பாட்டி வைத்தியம் வரை  மருத்துவத்தில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது இந்த கிராம்பு.


நாம் கிராம்பை வெறும் நறுமண பொருளாக மட்டுமே நினைத்திருக்கிறோம். ஆனால் இந்த கிராம்பில் உள்ள நன்மைகளை வைத்து, ஒரு பெரிய லிஸ்ட்டே போடலாம். கிராம்பில்  நம் உடலுக்கு தேவையான  கார்போ ஹைட்ரேட்,  புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள்,  ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற எண்ணற்ற வகையான   சத்துக்கள் அடங்கியுள்ளன.




அது மட்டுமில்லாமல் கிராம்பின் மொட்டு, பூ, இலை என்று அனைத்திலுமே மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது.. கிராம்பில் இருந்து எண்ணெய் கூட தயாரிக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.


சிலருக்கு வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும்  அவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.


அதுபோல ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் விரைவில் ஆஸ்துமா சரியாகும். சிலருக்கு அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படும் அவர்கள்  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர விரைவில் குணமாகும்..


சில குழந்தைகளுக்கு குளிக்கும்போது  காதில் நீர் போய்விட்டால் காது வலி  எடுக்கும். அதற்கு  ஒரு மூன்று அல்லது ஐந்து துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை லேசாக சூடு காட்டி, அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் காது வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு அஜீரண கோளாறு காரணமாக அடிக்கடி வாந்தி வரும். அவர்கள் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.


சரி மருத்துவத்துல மட்டும் தான் இந்த கிராம்போட பயன் இருக்கான்னு கேட்டா, இல்லை. சமையலில் அதுவும் முக்கியமா அசைவ குழம்புகளுக்கு  வாசனை கொடுப்பதற்கும் ருசியை கொடுப்பதற்கும்  கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் இந்த கிராம்பு  முக்கியமா பயன்படுகிறது.


கிராம்பு தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி, ஏற்காடு, திருநெல்வேலி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் வீரப்புலி இருப்பு காட்டு பகுதிகளான மாறாமலை, கரும்பாறை மற்றும் வேளிமலை பகுதிகளிலும் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது.. அதிலும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் கிராம்பு சீசன் ஆரம்பமாகும். இந்த காலங்களில்  தான் கிராம்பு அறுவடை செய்வார்கள்.. கிராம்பு மரத்திலிருந்து இலை, காய் பூ, காம்பு என்று எதுவுமே வேஸ்ட் ஆவதில்லை.. ஒவ்வொரு மரமும் 10 லிருந்து 15 அடி வரை  வளருமாம்.. ஒரு மரம் வளர்ந்து பயிர் அறுவடை பண்ணுவதற்கு  குறைந்தது 8 லிருந்து  10 வருடங்களாகவது ஆகும்..


கிராம்பை மரத்திலிருந்து பறித்து எடுத்ததும் அதில் இருக்கும் காம்பை கிள்ளி தனியாக வைத்து விடுவார்கள்.. அதன் பின்பு காலை 6 மணிக்கு போலவே  ஒரு பெரிய தார்ப்பாயில் மூன்று நாட்களாக வெயிலில் காயவைத்து  எடுப்பார்கள்... முதல் நாள் பச்சையாக காயவைத்து மறுநாள் கொஞ்சம் காய்ந்ததும் ஒரு முறை கிளறிவிட்டு மூன்றாம் நாள் நன்றாக காய்ந்ததும் தான்  அவற்றை எடுத்து முதல் தரம் இரண்டாம் தரம் என்று பிரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்... மரத்திலிருந்து பறித்து காயவைத்து அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்குள் நிறைய வேலைபாடுகள் இருக்கிறது... ஆனால் அதிலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே பயன் பட தான் செய்கிறது... 

அதுமட்டுமல்லாமல் அந்த பழத்திலிருந்து  தனியாக விதைக்கன்று தயாரிக்கிறார்கள். இரண்டு வருடம் வளர்த்த கன்று தான் விற்பனைக்கு கொடுக்கிறார்கள்.. கிராம்பை விற்பனைக்கு அனுப்பியதும் மீதம் இருக்கும் காம்பு, மகரந்த தூள், அதன் இலை என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது...கிராம்பு மரத்தின் பூமொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.




இத்தகைய மணம் மற்றும் சுவைமிகுந்த கிராம்பு  தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்து பெருமை சேர்க்கிறது. குமரி மாவட்ட பகுதியில் விளையும் கிராம்பு பொருட்களின் தரத்தை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கிராம்பு அதிகமாக பயிரிடப்படும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு "கன்னியாகுமரி கிராம்பு" என புவிசார் குறியீடு கிடைத்துள்ளது  இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.


இவ்வளவு சிறப்பு வாய்ந்த குமரி கிராம்புக்கு ஒரு நேரத்தில் சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்புக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.. இதனால்  கன்னியாகுமரி மலைத் தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் கிராம்புகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

அதனால் கிராம்பு விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம்புக்கு சரியான விலை நிர்ணயம் செய்து நேரடியாகக் கொள்முதல் செய்து மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்... இப்படி கிராம்பு விலை குறைந்துள்ளதால்  மறைமுகமாக பல்வேறு விவசாயிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


(Disclaimer: இயற்கை வைத்திய முறைகளை கடைப்பிடிக்கும்போது உரிய மருத்துவ ஆலோசனை பெற்று அதைப் பயன்படுத்துவது நல்லது)

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்