சுவைத்து பாருங்கள்..!! வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும்...!!!

Dec 31, 2022,11:51 PM IST

வாழ்வில் கடந்து சென்ற கசப்பான சம்பவங்களை  மறக்க முடியவில்லையா..!! சதைக்குள் சிக்கிக்கொண்ட கண்ணாடி சில்லாக  மனதை நெருடுகிறதா..!! அதை வெளியேற்ற முடியாதது போல் தோன்றினாலும் சாத்தியம் தான்..

எல்லோர் வாழ்விலும் இருண்ட காலங்கள் இருக்க  தான் செய்கிறது.. ஆனால் அவற்றால்தான் வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது.. என்னதான் அந்த கடின நாட்களை கடந்து வந்து இருந்தாலும், அவை தந்த காயங்களும் அதன் வடுவும் நம்முடன் தான் பயணிக்கும்..


வடுக்களை மறைய வைக்க முடியாது.. ஆனால் காயங்களுக்கு ஏற்ற மருந்து இட்டு விரைவில் மனதளவில் குணமாக்குவது வரும் நாட்களுக்கு  மிக அவசியமாகும்.. தேவையற்ற நினைவுகளை தேர்வு செய்து அதை நினைவில் இருந்து அழிக்க நாம் மூளையும் மனதும்  மென்பொருள் கொண்டது அல்ல.. அது நினைவுகளும், உணர்ச்சிகளும், உயிரும் கொண்ட அரிய கூடு..வடுவாகி போன கருப்பு பக்கங்களை நினைவு புத்தகத்தில் இருந்து தேடி எடுங்கள்...


ரணம் தந்த நினைவுகள் வலி கலந்தவையாக தான் இருக்கும்.. ஆனால் கடைசியாக ஒரு முறை என்று  வலி தங்கி கொண்டு  நினைவில் ஊடுருவி, காட்சிகளை வரிசை படுத்துங்கள்.. ஒவ்வொரு தருணமும் இன்று நடந்தது போல எண்ணி கவலை கொள்ளுங்கள்..பிறகு அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று அறிந்து, பெருமிதம் கொள்ளுங்கள்.. அந்த இருளை கடந்து விட்டதை உங்கள் மனதில்  ஆழமாக பதியும் படி உணருங்கள்... அதை தொடர்ந்து  உங்கள் வாழ்வில்இருள் இல்லா நாட்களை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.. வாழ்வின் அழகான மகிழ்ச்சியான நாட்களின் சந்தோசத்தை  நினைத்து வானவில் காணுங்கள்..


அதோடு வலிகள் இல்லா வடுக்களுடன், வருங்காலம் தரும் இன்ப துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும்  மன பக்குவம் கொண்டு, நம்பிக்கையான மனநிலையுடன் முன்னேறுங்கள் வாழ்வில்...!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்