ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!

Nov 19, 2024,12:55 PM IST

மும்பை: எல் ஐ சி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தேர்வு செய்யும் ஆப்ஷனைக் கூட இந்தியில்தான் வைத்துள்ளனர்.


எல் ஐ சி இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஆயுள் காப்பீடு அல்லாத வணிகப் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. இதன் சேவைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. இதில் தனிநபர் காப்பீட்டுக் கொள்கைகளில் மருத்துவக் காப்பீடு, விபத்து, சொத்து மற்றும் வாகனக் காப்பீடு என பல்வேறு கவரேஜ் பாலிசிகள் அடங்கி உள்ளன. எல்ஐசி பாலிசி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம்.




அதேபோல் தொழில்துறை இன்சூரன்ஸ் பாலிசிகள் திட்டம், கட்டுமானம், ஒப்பந்தங்கள், தீ, உபகரணங்கள் இழப்பு, போன்றவற்றுக்கான கவரேஜை வழங்குகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் எதிர்கால கனவுகளை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனத்தில் கணக்கு வைத்து பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் எல்ஐசியின் இணையதளம் முழுக்க முழுக்க இந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தி மொழியை மாற்றம் செய்ய भाषा என்ற பட்டனை அழுத்தி தேர்வு செய்தால் மட்டுமே LIC பக்கம் ஆங்கில மொழிக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியை மாற்றம் செய்வதற்கு முதலில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்தி தெரியாதவர்களுக்கு பெரும் திண்டாட்டமாகியுள்ளது.


இந்தி தவிர ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இந்தி மாற்றத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில்,  இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது.  ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள். எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


இருப்பினும் நாம் ஒரு மொழியை மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தால், அதே மொழியில்தான் தளம் வருகிறது என்பது சற்று ஆறுதலாக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. சேலம் டிரெய்னருக்கு நேர்ந்த பரிதாபம்.. இளம் வயது மாரடைப்பு என்ன காரணம்?

news

More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

news

ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!

news

கத்திக்குத்துக்குள்ளாகி குணமடைந்த .. கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!

news

நயன்தாராவை விடுங்க பாஸ்.. இட்லி கடை டீமுடன்.. பாங்காக் பறக்கப் போகும் தனுஷ்

news

அதிரடியாக மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைய விலை என்ன தெரியுமா?

news

திருச்செந்தூர் தெய்வானைக்கு திடீரென அவ்வளவு கோபம் வரக் காரணம்.. பாழாய்ப் போன அந்த செல்பிதான்!

news

வளிமண்டல சுழற்சி.. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

நவம்பர் 19 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்