நாவல் பழ சீசன் வந்தாச்சு.. விடுவோமா நாங்க.. கலர்ஃபுல் + டேஸ்ட்டியான ஜாம் செய்யலாம் வாங்க!

Jul 02, 2024,07:59 PM IST

சென்னை: நம்மூரில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சில பழங்கள் அதிகமாக கிடைக்கும். அந்தந்த சீசனில் கிடைக்கிற பழங்களை சாப்பிட்டால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லதுங்க. 


சம்மர்ல மாம்பழம், தர்ப்பூசணி போன்ற பழங்கள் கிடைப்பது போல இந்த ஆனி மாதம் காற்று அதிகமாக இருக்கும். இப்ப மார்க்கெட்ல கிடைக்கிற சீசனல் ஃப்ரூட்ல ஒன்னு தான் நாவல் பழம். ஜாமுன் ஃப்ரூட்னு சொல்லப்படுற நாவல் பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ பயன்கள் இருக்கு.


அதுல இருக்கிற துவர்ப்பு சுவை நம் உடலுக்கு ரொம்பவே முக்கியமான ஒன்னு. ஆனா துவர்ப்பு சுவையுடைய பழத்தை அவ்வளவா யாரும் சாப்பிட மாட்டாங்க. இருந்தாலும் சீசன் வந்தாச்சு, நாம சாப்பிடாம விடக் கூடாது இல்லையா.. அதனால, இன்னைக்கு நாவல் பழத்தை வச்ச ஹெல்தியான ஜாம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் தோழிகளே! பிரிசர்வேட்டிவ்ஸ் கலக்காமல் பண்ற ஜாமை உங்க குழந்தைகளுக்கு கூட சாப்பிட கொடுக்கலாம்.


அதுக்கு முதல்ல நாவல் பழத்துல இருக்குற மருத்துவ நன்மைகள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.




1. நாவல் பழத்தின் நிறமான பர்ப்பிள் நிறத்திற்கு காரணம் அதில் உள்ள அந்தோசயனின் என்னும் வேதிப்பொருள் தாங்க. இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இது ஆன்ட்டி டயாபட்டிக் எனும் நீரிழிவு தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.


2. நாவல் பழத்தில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடென்ட் புற்றுநோய் செல்களை அழிக்கும் வேலையை செய்கிறது.


3. இதில் உள்ள விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நம் உடலில் ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க உதவுகிறது.


4. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும்.


5. நாவல் பழத்தின் கொட்டையிலும் அதிகப்படியான சத்துக்கள் உள்ளதால் இந்த கொட்டையை காய வைத்து அரைத்து பொடி பண்ணி அந்த பொடியை தினமும் உணவில் சேர்த்து வர உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை குறைந்து நீரிழிவு கட்டுக்குள் வரும்.


சரி, இதன் நன்மைகளை பார்த்தோம். இப்ப எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!


தேவையான பொருட்கள்:


நாவல் பழம் - ஒரு கப் (பெரியது)

சர்க்கரை  - ஒரு கப்

எலுமிச்சை - பாதி (ஒரு மூடி)


செய்முறை: முதலில் நாவல் பழங்களை தண்ணீரில் நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நாவல் பழங்களை போட்டு நன்கு வேக விடவும். வெந்ததும் கொட்டைகள் தனியே வந்துவிடும். அவற்றை எடுத்துவிட்டு ஆறியபின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


 பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையை சேர்த்து நன்கு கொதி வந்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு கெட்டியான ஜாம் பதம் வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து, வேக வைக்க வேண்டும். நன்கு கெட்டியானவுடன் அரைமூடி லெமன் பிழிந்து இறக்கவும்.


 ஆறியபின் ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு ஸ்டோர் பண்ணினால் ஒரு மாதம் வரை வைத்து கூட யூஸ் பண்ணலாம். பிரட், சப்பாத்தி, தோசைக்கு கூட ரொம்ப சுவையாகவும் கலர்ஃபுல்லாகவும் இருக்கும். செயற்கை நிறங்கள் இல்லாத இந்த ஜாமை நீங்களும் செய்து பாருங்கள். தோழிகளே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்