மயிலாடுதுறை மக்களே.. ஊருக்குள்ள சிறுத்தை நடமாடுது.. கவனமா இருங்க.. போலீஸ் எச்சரிக்கை!

Apr 03, 2024,10:43 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று உலா வரும் வீடியோ  வெளியாகி, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் நள்ளிரவில் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வருவது போன்ற வீடியோ காட்சி வெளியானது. முதலில் ஏதோ விலங்கு என்று இருந்துள்ளனர். ஆனால் அந்த விலங்கின் காலடியை வனத்துறையினர் ஆய்வு செய்து இது சிறுத்தையின் காலடி கண்டுபிடித்தனர். இந்த வீடியோவை பார்த்துவிட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 




காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அப்பகுதியில் சிறுத்தை கால் தடம் உள்ளதை அறிந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நாய் ஒன்றை துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.


இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் வனத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கியால் தகவல் கொடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். பொதுமக்கள் யாரேனும் சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


வீதியில் சிறுத்தை வலம் வரும் வீடியோ பதிவு


அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள பால சரஸ்வதி பள்ளிக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். சுற்றி காடுகள் இல்லாத மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை எப்படி வந்தது என்பது ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் நடமாடிய சிறுத்தை தற்போது எங்கு பதுங்கி உள்ளது.. என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்