சென்னை : விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தில் மூன்றாவது சிங்கிளாக அன்பெனும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை உள்ளிட்ட ஏற்பாடுகள் தீயாய் நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்திற்கு முதல் 5 நாட்களுக்கு 5 தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
லியோ படத்தின் முதல் இரண்டு பாடல்கள் அரசியல் ரீதியான சர்ச்சைகளை கிளப்பியது. அடுத்து ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் கடைசி நிமிடத்தில் அவ்விழா பல காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்க படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இதில் இடம்பெற்ற அதிகப்படியாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள், வன்முறைகள், விஜய் பேசிய கெட்ட வார்த்தை என அனைத்தும் பலத்த எதிர்ப்பையும், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதையடுத்து இந்த டிரைலர் 13 கட்களை போட்டது சென்சார் போர்டு.
அது மட்டுமல்ல படத்தின் டிரைலரை விமர்சகர்களும், ரசிகர்களும் அக்குவேரு ஆணிவேராக பிரித்து மேய்ந்து, அலசி ஆராய்ந்து தினமும் ஒரு புது தகவலை வெளியிட்டு வந்தனர். இது ஹாலிவுட் படங்களின் காப்பி என்றும் சிலரும், விக்ரம் படத்தில் வரும் காட்சிகள் பலரும் அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளது, அவர் யார், இவர் யார், இதை கவனித்தீர்களா, அதை கவனித்தீர்களா என சோஷியல் மீடியாவை அதகளப்படுத்தி விட்டனர் கடந்த ஒரு வாரமாக.
படம் ரிலீசிற்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. இந்த சமயத்தில் வரவேற்பை விட நெகடிவ் விமர்சனங்களே அதிகமாக வருகிறதே என படக்குழுவினர் நினைத்தார்களோ என்னவோ, இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், விஜய் - த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் இல்லையே என ஆதங்கப்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்தவும் இன்று மூன்றாவது சிங்கிளை வெளியிட்டுள்ளனர். அன்பெனும் ஆயுதம் நீயே என்ற மெடிலோடி, காதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஷ்ணு எடவனின் வரிகளில், அனிருத் இசையில், அனிருத் மற்றும் லோதிகா இணைந்து பாடிய அன்பெனும் பாடல் காஷ்மீரின் அழகு, விஜய்- த்ரிஷாவின் காதல், காஷ்மீர் அழகையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும் த்ரிஷாவின் அழகு, குடும்ப பாசம், சென்டிமென்ட், காதல் நினைவுகள் என அனைத்தும் கலந்த கலவையாக, மனதை வருடுவதாக அமைந்துள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோயின் இருக்க மாட்டார், இருந்தாலும் அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப்படாது. ஆனால் த்ரிஷாவிற்காக அந்த ஃபார்முலாவை லியோ படத்தில் கைவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜிற்கு இப்படி எல்லாம் கூட பாடல் வைக்க தெரியுமா? இது லோகேஷ் கனகராஜ் படம் தானா? என அனைவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சூப்பரான பாடலை 3வது சிங்கிளாக வெளியிட்டு அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்கள். ஏற்கனவே லியோ ரிலீஸ் எப்போ என காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது மற்றொரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு காதிற்கு இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும் ஒரு காதல் பாடலை படைத்துள்ளார்.
சூப்பர் என சொல்ல வைத்துள்ள அன்பெனும் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #LeoThirdSingle, #LeoFilm, #PremaOhAyudham, #Anbenum ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}