சென்னை: லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எந்த இடத்தில் ரத்து செய்யப்பட்டதோ அதே இடத்தில் படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்த படக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு கோரி பெரியமேடு காவல் நிலையத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ரசிகர்கள் இப்போதே தடபுடலாக இதைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான படம்தான் லியோ. உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் கூடவே எதிர்ப்புகளும், முட்டுக்கட்டைகளும் இருக்கவே செய்தன.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக ஏமாற்றி விட்டது. இருந்தாலும் படத்தை மிகப் பெரிய வெற்றியாக ரசிகர்கள் மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இப்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழாவை நடத்த படக் குழு முடிவு செய்துள்ளதாகவும், விஜய் கலந்து கொள்வார் என்றும் அந்த செய்தி கூறுகிறது. இந்த விழாவுக்குப் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மணிகண்டன் என்பவர் பெரியமேடு போலீஸ் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.
வழக்கமாக ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் பிரமாண்டமாக வைப்பார்கள். முன்பு படங்கள் 100 நாள் ஓடினால், வெற்றி விழா நடைபெறும். காலப் போக்கில் இந்த வெற்றி விழாக்கள் இல்லாமல் போய் விட்டன. காரணம் இப்போதெல்லாம் படங்கள் 25 நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓடினாலே உலக அதிசயம் என்றாகி விட்டதால். அந்த வகையில் லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்றால், அது நீண்ட காலத்திற்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற முதல் வெற்றி விழாவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!