Leo release: எல்லா டோரும் குளோஸ்.. 9 மணிக்கே முதல் காட்சி.. தயாரிப்பு நிறுவனம் முடிவு!

Oct 18, 2023,10:26 AM IST

சென்னை: அரசு அறிவித்தபடி லியோ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு   திரையிடப்படுகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்   லலித் குமார். லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. 




இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் லியோ வெளியாக இருக்கிறது. லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில்,  7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. காலை 7 மணி காட்சியை அனுமதிக்க தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், தியேட்டர்களும் காட்சிகளின் நேரத்தை மாற்ற முடியாது என்ற நிலையில்,வேறு வழியில்லாததால் திட்டமிட்டபடி படத்தைத் திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.


லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குழப்பம் நீங்கியதால் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. லியோ  விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான படம்  என்ற நிலையில் தமிழகம் முழுவதிலும் விஜய் ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்றே போர்ஸ்டர் அடித்து லியோ பட ரிலீஸ்சுக்கு என்றி கொடுத்து வருகின்றனர்.


படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் வெளிவருவதற்கு முன்னரும், பட ரிலீஸ்சிலும் சர்ச்சைகளும் பஞ்சமே இல்லை எனலாம். லியோ பட ரிலீசில் விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர். 


ஒரு பட ரிலீசில் இந்தளவு பிரச்சனை இருப்பதால்,விஜய் ரசிகர்களை விட பொது மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவு நடத்து வருகின்ற நிலையில் முன்டியடித்துக் கொண்டு டிக்கட் வாங்கி வருகின்றனர். படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்களே.......!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்