ஐதராபாத் : தமிழகத்தில் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் தான் பிரச்சனை என்றால் ஐதராபாத்தில் லியோ படத்தை வெளியிடவதற்கே தடை விதித்துள்ளனர். அக்டோபர் 20 ம் தேதி வரை லியோ படத்தை வெளியிடக் கூடாது என ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. என்ன நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ தெரியவில்லை ஒவ்வொரு அப்டேட் வெளியிடும் போதும் ஒரு பிரச்சனை, சர்ச்சை, எதிர்ப்பை லியோ படம் சந்தித்து வந்தது. படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் துவங்கி அனைத்திற்கும் விமர்சனங்கள் எழுந்தன. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் கடைசி நிமிடத்தில் பல காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
சரி படத்தையாவது ரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்கள் அனைத்தையும் சகித்து கொண்டார்கள். ஆனால் பட ரிலீசில் தான் பிரச்சனையே பூதாகரமாகி உள்ளது. கேரளா, கர்நாடகாவில் லியோ படத்தின் ஃபர்ஸ்டே ஃபர்ஸ்ட் ஷோ வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் முதல் காட்சியை 9 மணிக்கு தான் வெளியிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதோடு லியோ படத்திற்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து, ரசிகர்களுக்காக முதல் நாள் முதல் காட்சியை காலை 4 மணிக்கு வெளியிட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால் 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி தர மறுத்துள்ள சென்னை ஐகோர்ட், படத்தை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு வெளியிடுவது பற்றி தமிழக அரசு முடிவு செய்யலாம் என கூறி உள்ளது.
நாளை மதியத்திற்கும் லியோ பட முதல் காட்சி பற்றி முடிவை அறிவிக்க தமிழக அரசிற்கு ஐகோர்ட் அவகாசம் அளித்துள்ளது. இதனால் முதல் காட்சி எத்தனை மணிக்கு ரிலீசாகும் என்பது இதுவரை தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழை தொடர்ந்து லியோ படத்தின் தெலுங்கு வெர்சனுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. லியோ படத்தின் டைட்டிலை விதிகளை மீறி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 20 ம் தேதி வரை லியோ படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யக் கூடாது என ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழிலும் படத்தை ரிலீஸ் செய்வதற்கு இது போல் ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என கலக்கத்தில் உள்ளனர். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தான் விஜய் படத்திற்கு மட்டும் இவ்வாறு செய்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}