சென்னை: லியோ படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு:
லியோ படம் அக்டோபர் 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளைத் திரையிடலாம்.
முதல் நாளன்று ஓபனிங் ஷோவானது அதாவது முதல் காட்சியானது காலை 9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும். கடைசிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைய வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் நாட்களில் படம் பார்க்க வருவோரின் பாதுகாப்பு மற்றும் தியேட்டர்களின் பாதுகாப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
டிக்கெட் கட்டணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விற்கப்படாமல் இருப்பதும் கணகாணிக்கப்பட வேண்டும். விதிமீறல் மற்றும் உத்தரவுகளை மீறி நடப்போர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}