விஜய்யின் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து... இது தான் காரணமா ?

Sep 27, 2023,07:00 AM IST

சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


விஜய்யின் 67 வது படமாக உருவாகி உள்ளது லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன், என்டர்டைன்மென்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.




படத்தின் ரிலீசிற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடத்த போகிறார்கள் என அனைவரும் ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். விஜய்யின் மாஸான, அரசியல் பஞ்ச் கலந்த பேச்சை கேட்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். விஜய் அரசியலுக்கு வர தயாராகி வருவதால் இந்த விழா அதற்கான ஒரு ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


செப்டம்பர் 30 ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும், அதற்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக எக்ஸ் தளத்தில் தகவல்களும், பல விதமான போட்டோக்களும் தீயாய் பரவி வருகிறது. இதனால் லியோ ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.


ஆனால் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


லியோ ஆடியோ வெளியீட்டு விழா குறித்து செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், " அதிகமானவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரிலும், பாதுகாப்பு காரணங்களை மனதில் கொண்டும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்தை மதிப்பு தொடர்ந்து லியோ குறித்த அப்டேட்களை வெளியிட்டு அவர்களை மகிழ்விக்க உள்ளோம்.


அரசியல் அழுத்தமா?




பலரும் கற்பனை செய்து கொள்வது போல் அரசியல் அழுத்தம் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவே இந்த முடிவு எடுக்கப்படவில்லை " என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ விளக்கமும் அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே #LeoAudioLaunch என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி உள்ளது.


அது மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து விஜய் ரசிகர்கள் #WeStandWithLeo என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் அதையும் டிரெண்டாக்கி உள்ளனர். அரசியல் அழுத்தம் காரணமாகவே லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்