எந்த வதந்திகளையும் தயவுசெய்து நம்பாதீங்க.. எனக்கு பிரச்சனை எதுவும் கிடையாது.. பாடகி கல்பனா

Mar 07, 2025,07:48 PM IST

சென்னை:எந்த வதந்திகளையும் தயவு செய்து நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சினை என்று எதுவும் கிடையாது. கடவுளுடைய அருளால் நான் நன்றாக இருக்கிறேன் என பாடகி கல்பனா வீடியோ வெளியிட்டுள்ளார்.


பிரபல பின்னணி பாடகி கல்பனா தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட  மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். அதே சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். 44 வயதான இவர் தற்போது ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் வீட்டின் கதவுகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூட்டி இருந்ததாக சந்தேகப்பட்டு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனடியாக அங்கு வந்த போலீசார் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது கல்பனா சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 


பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதனால் பாடகி கல்பனாவுக்கும் கணவர் பிரசாந்த் பிரபாகருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை நிலவுவதால் அவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக சோசியல் மீடியாக்களிலும் செய்திகளிலும் தகவல்கள் தீயாய் பரவின. ஆனால் அவரது மகள் இதை மறுத்தார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரச்சினை இல்லை. இது தற்கொலை முயற்சியும் இல்லை என்று கூறியிருந்தார்.




இதற்கிடையே சுயநினைவு திரும்பிய கல்பனாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது எனக்கு தூக்கம் சரியாக வராத காரணத்தினால் தூக்க மாத்திரை அதிகளவு எடுத்துக் கொண்டேன். நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என வாக்குமூலம் அளித்தார்.  இந்த நிலையில் இது குறித்து ரசிகர்களுக்கு பாடகி கல்பனா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


வணக்கம் நான் கல்பனா ராகவேந்தர். என்ன பற்றியும், என் கணவரை பற்றியும்  செய்திகள் மற்றும் மீடியாக்களில் தவறான வதந்திகள் பரவிக் கொண்டிருப்பதால் அதைப் பற்றி தெளிவு கொடுக்கவே இந்த வீடியோவை நான் வெளியிட்டு இருக்கிறேன். நான் இந்த வயதில்

பிஹெச்.டி,  எல்.எல்.டி என நிறைய விஷயங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன் என்னுடைய மியூசிக் கேரியரிலும் தீவிர கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறேன். 


இதனால் ரொம்ப ஸ்ட்ரெஸ் லெவல் அதிகரித்ததால் எனக்கு பல வருடமாக தூக்கம் இல்லை. இந்த பிரச்சினை சரியாவதற்காக மருத்துவரிடம் முறையான ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். அப்போது எனக்கு இன்சோம்னியா நோய் இருப்பதாக மருத்துவர்கள் தூக்க மாத்திரையை பரிந்துரை செய்தார்கள். இந்த மாத்திரைகளை கடந்த சில நாட்களாகவே டோஸ் கூடுதலாக எடுத்துக் கொண்டதால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டேன். 


ஆனால் நான் இன்று உயிருடன் திரும்பி வந்து மீண்டும் உங்களிடம் பேசுகின்றேன் என்றால் அதற்கு ஒரே காரணம் அன்றைக்கு என் கணவர் எனக்காக பட்ட பாடு தான். என்னை காப்பாற்றுவதற்காக பட்ட கஷ்டம் தான். ஏனென்றால் வெளியூரில் இருந்த எனது கணவர் கரெக்டான நேரத்தில் போலீசாரின் உதவியுடன் ஆம்புலன்ஸ், ட்ரீட்மென்ட் என எல்லாத்தையும் ஒருங்கிணைத்து சரியான நேரத்தில் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.


அதனால் எந்த வதந்திகளையும் தயவு செய்து நம்பாதீர்கள். எனக்கு தனிப்பட்ட பிரச்சினை என்று எதுவும் கிடையாது. கடவுளுடைய அருளால் இந்த ஒரு தருணத்தில் நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் பிரசாந்த் பிரபாகர் என்னுடைய கணவர் எனக்கு கிடைத்தது. அதனால் இந்த தருணத்தில் காவல்துறைக்கும், மீடியாவுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் எனக்காக நான் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த எத்தனையோ நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்