தலைவர்கள்.. பழங்கள் போல இருக்க வேண்டும்.. டாக்டர் தமிழிசை அட்வைஸ்!

Jul 22, 2023,11:30 AM IST

புதுச்சேரி: பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர்கள் பழங்களைப் போல இருக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

மாதா அமிர்தானந்த மயி அமைப்பின் சார்பில் உலகளாவிய விதைப்பந்து பிரச்சாரம் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.  துணை நிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.  புதுச்சேரி சபாநாயகர் ஆர். செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் பேசியதிலிருந்து சில துளிகள்:



முன்பெல்லாம், ஒரு பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியா உலக நாடுகளை எதிர் பார்த்து காத்திருக்கும். ஆனால் இன்று உலக நாடுகள் தீர்வுகளுக்காக இந்தியாவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.  “ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது சேவை செய்ய வேண்டும்.  அல்லது ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரமாவது சேவைக்காக முழுமையாக ஒதுக்க வேண்டும்” என்று மாதா அமிர்தானந்தமயி அம்மா கூறியது நினைவுக்கு வருகிறது.

பத்து லட்சம் விதைப்பந்துகளை விதைக்க இருப்பதற்காக என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக மாதா அமிர்தானந்தமயி மடத்தை பாராட்டுகிறேன். மேலும், எப்பொழுது ஒரு செயல் பொதுமக்கள் இயக்கமாக மாறுகிறதோ அப்பொழுது தான் அது வெற்றி பெறும். 

ஒரு மரம் 300 கிராம் ஆக்ஸிஜனை கொடுக்கிறது.  இது ஒரு குடும்பத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் அளவாகும். அதனால் தான் ஒரு குடும்பத்திற்கு ஒரு மரம் நட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் விஞ்ஞான உலகில் செயற்கையாக வாழ்வதற்கு நாம் கற்றுக் கொண்டோம். ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் காற்று நான்கு குளிர்சாதனத்திற்கு சமம்.



இன்று நாம் இந்த உலகை வெப்பமயமாக்கி கொண்டே இருக்கிறோம். நாம் வழிபடும் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு தல விருட்சம் இருக்கும். ஆக இவ்வாறு நம் வாழ்வியலோடு ஒன்றியது தான் மரம். ஆனால் மரங்களை இன்று நாம் பாதுகாப்பது இல்லை.   எனவே இந்த நிலை��ை சரி செய்ய, காடுகளையும் மரங்களையும் பாதுகாப்பதற்கு இந்த விதைப் பந்துகள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

ஒரு மரத்திற்கு உரமாக போடுவது அழுகிப்போன பொருட்களை தான்,  ஆனால் அந்த தென்னை மரம் நமக்கு நல்ல சுவையான பழங்களை தரும். “உனக்கு யாரும் கெடுதல் செய்தாலும், அவர்களுக்கு நீ நல்லதை தர வேண்டும்” என்கிற வாழ்க்கை பாடத்தையும் மரங்கள் சொல்லிக் கொடுக்கின்றன.

ஆன்மீகமாக பார்க்கப்பட்ட மரங்கள் மருத்துவ குணங்குளும் நிறைந்தே இருக்கும். எந்தவித மருத்துவ முன்னேற்றமும் இல்லாத காலத்திலேயே ‘சின்னம்மை’ போன்ற நோய்கள் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையில் அங்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேப்பிலை வைத்து வந்திருக்கிறோம்.

பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர்கள் பழங்களைப் போல இருக்க வேண்டும். மாங்காய், வாழைக்காய் ஆரம்ப காலத்தில் சதையோடு ஒட்டி இருக்கும். ஆனால் அவை பழுக்கும்போது தோலையும் சதையும் தனியாக பிரித்தெடுக்க  முடியும்.  ஆனால் கொய்யாப்பழமானது காயாக இருக்கும் பொழுதும் கனியாக இருக்கும் போதும் சதை தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அப்படித்தான் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஆரம்ப காலம் தொட்டு உயரும் வரையில் தன்னை சார்ந்தோரிடமும் பொதுமக்களோடும் இணைந்து இருக்க வேண்டும்.

மாதா அமிர்தானந்தமயி அவர்களின் காடுகளை விரிவுபடுத்தி, மரங்களை வளர்க்கும் முயற்சிக்கு நன்றி. இது வருங்காலத்திற்கு தேவையான ஒன்று.  வருங்காலத்தில் நம் அனைவருக்குமே காற்று, உணவு, பசுமை, மற்றும் தூய்மை தேவை.   ஆனால் இவைகளை மறந்து செயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் கொரோனா வந்து நமக்கு பாடத்தை கற்பித்தது.

‘லேண்செட்’ மருத்துவ பத்திரிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் மூலமாக ஏற்பட இருந்த 45 லட்சம் பேரின் இறப்பானது இந்தியாவில் தடுக்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார்கள். அதோடு,  இந்திய பாரம்பரிய உணவு முறையும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நோய்களிலிருந்து காப்பாற்றி இருக்கிறது என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உலகிற்கு இயற்கை பற்றி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விதைப்பந்துகளை வாங்கிக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, இதனை மண்ணில் விதைத்து மரமாவதை பார்த்து நீங்கள் அனைவரும் மகிழ வேண்டும்.  இதனை நீங்கள் இயற்கைக்கு செய்யும் உபகாரமாக நினைக்க வேண்டும்.

இயற்கைக்கு நாம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். முன்பு, நாம் அனைத்து இயற்கை வளங்களையும் வழிபட்டோம். ஆனால் இன்று அனைத்தையும் அழித்துவிட்டு செயற்கையை நோக்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறோம்.  இந்த விதைகளை விதைத்து வருங்காலத்தை பசுமையாக, வளமையாக, மகிழ்ச்சியாக மாற்றுவோம் என உறுதி எடுப்போம் என்றார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்