நவம்பர் 1.. தமிழ்நாட்டின் எல்லை காத்த மாவீரர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் புகழாரம்!

Nov 01, 2024,11:56 AM IST

சென்னை:  நவம்பர் 1ம் தேதியையொட்டி எல்லை காக்க நடந்த போரில் உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.


இன்று நவம்பர் 1ம் தேதியாகும். இந்தியாவில் மொழிவாரி அடிப்படையில் பல்வேறு மாநிலங்கள் உருவான தினம். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை உருவாகிய நாள் இது. இந்த நாளை கர்நாடகா, ஆந்திராவில் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடுகின்றனர்.


தமிழ்நாட்டிலும் பல கட்சிகள் இந்த நாளை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுகின்றன. இருப்பினும், தமிழ்நாடு என்று தமிழ்நாட்டுக்கு அண்ணா பெயர் சூட்டிய ஜூலை மாதத்தில்தான் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்பது திமுக அரசின் நிலைப்பாடாகும்.




முதல்வர் மு.க.ஸ்டாலின்


இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1ம் தேதியையொட்டி ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!


தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டை மீட்போம் - எடப்பாடி பழனிச்சாமி


அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,


தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்- டாக்டர் ராமதாஸ்


பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:


சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு  68  ஆண்டுகளுக்கு முன்பு  நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின்  அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி  தான் உண்மையான தமிழ்நாடு நாள்.  இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும்,  தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம்  சகோதர உணர்வுடன்  ஏற்றுக் கொண்டோம்; நமது நிலப்பரப்பை  சகோதர மாநிலங்களுக்கு  விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன்... மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம்.  நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த  நாளில்  உறுதியேற்போம்!


அரை நூற்றாண்டுக்கும் மேலாக  திராவிடம் என்ற காலாவதியாகிப் போன தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அதன் திறனுக்குரிய வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்காக வளர்ச்சி மாடல் அரசை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இந்த நாளில் நாம்  உறுதி ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்