சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மார்ச் 1ஆம் தேதி தனது 72 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை இன்று தொடங்கி வைத்தார்.அப்போது மாணவர்கள் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு க ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அங்கு நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய 105 ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து
இந்தி திணிப்பை எதிர்ப்போம் எனவும் தொண்டர்கள் மத்தியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் முதல் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தலைவர்களின் வாழ்த்து குறிப்பில்,
பிரதமர் நரேந்திர மோடி:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார் .
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இனமான பேராசிரியர் வழியில் கழகத்தை வழிநடத்தும் கழகத் தலைவர் தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை பெற்று திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை மாநில உரிமைகளை வலியுறுத்தி இன்று இந்தியாவையே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இளைஞர் அணி தான் என் தாய் வீடு என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத் தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டும் என வாழ்த்துகிறோம். மக்கள் நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026ல் மீண்டும் அமைத்து கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக தொடர இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என் ரவி:
தாங்கள் இன்று தங்களுடைய 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்.
திமுக எம்.பி கனிமொழி:
தென்னகத்தின் உரிமை குரலாய் தமிழ்நாட்டின் சுயமரியாதை சுடராய் தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கிவரும் திராவிட மாடல் முதல்வர் கழகத் தலைவர் அண்ணன் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி:
எனது சகோதரரும், தமிழக முதலமைச்சருமான திரு.மு.க அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.
தவெக தலைவர் விஜய்:
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்:
முதல்வர் மு.க ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடன் நீடுடி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
தமிழ்நாட்டில் இன்று.. 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. கோடை பருவமழை கணக்கீடு தொடக்கம்..!
சம்பா ரவை உப்புமா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீ்ம் ஜாய்.. செஞ்சு பாருங்க.. சொக்கிப் போவீங்க!
தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!
இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.. மக்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் செய்தி
பெண்கள் குறித்த சீமானின் பேச்சை டாக்டர் தமிழிசை ஆதரிக்கிறாரா?.. காங்கிரஸ் எம்பி சுதா கேள்வி
மார்ச் முதல் நாள்.. சிவனுக்கு ஏக வில்வம் சமர்ப்பித்து நவக்கிரக வழிபாடு செய்ய.. நலம் பெருகும்
தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் தங்கம் விலை...இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, ஆளுநர், விஜய், ரஜினிகாந்த்.. வாழ்த்து..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 01, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}