ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் இரங்கல்

Dec 14, 2024,08:04 PM IST

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலவர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த இரண்டு வாரமாக நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலை 10.28 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.  பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் நாளை மின் மயானத்தில்  இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:




தந்தை பெரியார், ஈ வி கே சம்பத் ஆகியோரின் பெரும் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ வி கே எஸ் இளங்கோவன். எப்போதும் தன் மனதில் பட்டதை பேசக்கூடிய பண்புக்கு சொந்தக்காரர். ஈவிகேஎஸ்  இளங்கோவன் தனது அன்பு மகனை இழந்ததிலிருந்து மனதளவில் மனம் உடைந்து போயிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று தன் கவலைகளை மீறி பணியாற்றியவர். பல ஆண்டுகாலம் தமிழ்நாடு அரசியலில் முன்னணி தலைவராக விளங்கியவர்.


இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனை தருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் கூட என்னை சந்திக்க வேண்டும் என்றார்


மருத்துவமனையில் நான் சென்று சந்தித்தபோது பேசும் நிலையில் அவர் இல்லை. மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்து அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது கேட்டு அறிந்தேன் என கூறியுள்ளார்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: 


ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவு தமிழ்நாடு அரசியல் களத்திற்கே பேரிழப்பாகும். தந்தை பெரியாரின் பேரன் ஈ வி கே எஸ் இளங்கோவன். கலைஞர் மீது மாறா பற்று கொண்டவர். எதையுமே வெளிப்படையாக பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றோம். பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை வழங்கிய போது அவர் வாழ்த்தி பேசியது இன்னும் நம் மனதில் நிழலாடுகிறது எனக்கூறி உள்ளார் 


தவெக தலைவர் விஜய்:


மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். 


அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்